தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில்கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.ஆனால் 4 லட்சம் பேருக்கு தொழில்வழங்கியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.இந்த தொழில் வாய்ப்புகள் நாம் அறிந்தவரைஇலங்கையர்களுக்கு வழங்கப்படவில்லை.பிரதமர் தொடர்ந்து இதனை கூறுவதாகஇருந்தால் அதனை அவர் நிரூபிக்க வேண்டும்.
ஆனால் பிரதமரின் நண்பர் மத்திய வங்கியை கொள்ளைகாரார் அலோசியஸ்முதலாளியின் மாமனார் அர்ஜுன் மகேந்திரனை நீக்கிவிட்டு விட்டு நியமித்த தற்போதயமத்திய வங்கி ஆளுனரின் அறிக்கை படி இலங்கையில் கடந்த வருடம் சுமார் 4 லட்சத்து70 ஆயிரம் தொழில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தரப்பினால் பத்திரிகைகளில் தற்போது விளம்பரம் செய்யப்படுவதைகாணமுடிகிறது. குறித்த விளம்பரங்களில் இந்த நாட்டை கட்டியெழுப்ப , தொழில்நிர்மாணம் செய்ய ஐக்கிய தேசிய கட்சியியால் மட்டுமே முடியும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சுதந்திர கட்சி கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்த போதும் ஐக்கிய தேசியகட்சியின் கொள்கைகளே முன்னெடுக்கப்படுகிறது.நாட்டின் தேசிய சொத்துக்கள்வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது.நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்குவிற்பனை செய்வது சுதந்திர கட்சி கொள்கையல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூடஅரச நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்றார் ஆனால் அவை 10வருடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.அதனால் தான் மஹிந்த ராஜபக்ஷஅவர்களால் ஸ்ரீ லங்கன் , எயார், ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனக்களைஅரசமயமாக்க முடிந்தது.
ஆனால் தற்போது நாட்டின் சொத்துக்கள் 99 அல்லது 40 வருடங்களுக்கு குத்தகைக்குவழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.