ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை 95 சந்தியில் இருந்து சுமார் இரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிரிவு 10 ல் அமைந்துள்ள அல்அக்ஸா நகர் சியாரத் வீதி மிகவும் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமை தற்போதைய மழைகாலங்களில் உழவடிக்கப்பட்ட வயல் நிலங்களாக காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஒன்றரை கிலோமீற்றர் தூரமான இவ்வீதி மழைகாலங்களில் தாங்கள் பயணம் செய்யமுடியாதுள்ளதாகவும் இதனால் நாளாந்தம் இவ்வீதியைக் கடந்தே சாலியபுர சிங்கள மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் முள்ளிப்பொத்தானை தாருஸ்ஸலாம் மாணவர்கள் என இவ்வீதியூடாக பயணம் செய்யவேண்டியுள்ளது எனவும் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதனால் இரவு நேரங்களில் பயணம் செய்ய முடியாத பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்குவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ,பாடசாலை மாணவர்கள்,விவசாயிகள் என பலரும் இவ்வீதியூடாக பயணிக்கின்றனர் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.இவ் விடயம் தொடர்பில் உரிய அரச அதிகாரிகள்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களூக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.கடந்த பல வருடகாலமாக தங்களது கிராம வீதி அபிவிருத்திகள் புறக்கணிக்கப்பட்டே வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே மாரிகால மழைக்கு முன்பு இவ்வீதியை செப்பனிடுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு கோரிக்கை விடுகாகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின்விசேடமாக கிண்ணியாவில் இருக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே இது உங்களின் கவனத்திற்கு.