எரிபொருளை முறையாக பகிர முடியாத அரசே அதிகாரத்தை பகிர முயற்சி செய்கிறது !

ரிபொருளை முறையாக பகிர முடியாத அரசே நாட்டில் அதிகாரத்தை பகிர முயற்சிசெய்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

தங்கல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டஅவர் மேலும் குறிப்பிட்டதாவது.

இன்று இலங்கை நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு ஓ.ஐ.சிநிறுவனத்தின் எரிபொருள் தரம் குறைவாக இருந்தமையே காரணமாக அரசுகுறிப்பிடப்படுகிறது.இந்த ஓ.ஐ.சி இந்திய நிறுவனம் இலங்கையின் இருபது சதவீதஎரிபொருள் தேவையை பூர்த்தி செய்கிறது. இது இலங்கை அரசின் தனியார்மயமாக்கலின் ஒரு அங்கமாகும்.

இருபது சதவீத தனியார் மயமாக்கலின் விளைவு நாட்டையே ஸ்தம்பித நிலைக்கு தள்ளமுடியுமாக இருந்தால், பூரணமாக தனியார் மயமாக்கப்பட்டால் இலங்கையின் நிலைஎன்னவாகும். இதனை வைத்து இலங்கை அரசை நிர்ப்பத்துக்கு தள்ளி, வெளிநாடுகள்தங்களது தேவைகளை கூட நிறைவு செய்து கொள்ளலாம்.

ரணில் விக்ரமசிங்க அரசு தனியார் மயமாக்கல் சிந்தனையை அடிப்படையாககொண்டதென்பது இலங்கை மக்கள் அறிந்த வெளிப்படையான உண்மையாகும்.இதன்பாதிப்பை இலங்கை மக்கள் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டின் மூலமாவதுஅறிந்துகொள்ள வேண்டும்.

அண்மையில் இவ்வரசானது திருகோணமலை துறைமுக எண்ணை தாங்கிகளைஇந்தியாவுக்கு விற்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது. இதனை மிகக்கடுமையாக எதிர்த்த பெற்றோலிய கூட்டுத் தாபனம் வேலை நிறுத்தப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.அவர்கள் இந்த போராட்டத்தைமுன்னெடுத்திருக்காவிட்டால் இன்று திருகோணமலை எண்ணை தாங்கிகள் இந்தியாவசமாகி,இலங்கை எரிபொருள் வர்த்தகம் படிப்படியாக இந்தியாவின் கரங்களைசென்றடைந்திருக்கும்.

அன்று லங்கா பெற்றோலிய கூட்டுத் தாபன ஊழியர்கள் நடாத்திய போராட்டம்இவ்விடயத்தினூடாக நியாயப்படுத்தப்படுகிறது. இலங்கை மக்கள் இவ்வரசின் இச்செயற்பாடுகளின் பாதிப்பை இவ்விடத்தில் நினைவூட்டிப் பாருங்கள்.இவ்வரசுதொடர்ந்தால் இலங்கை நாடானது மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும்என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை என குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -