இது விடயமாக அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை வருமாறு,
பாணந்துறை ஜீலான் மத்திய கல்லுாரி புதிய அதிபரின் ஒழுங்கீன் செயற்பாடுகளினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த கவலை
கடந்த 25.10.2017 வணிக தின விழாவையொட்டி பாடசாலை உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களால் வெளியிடவிருந்த வளம் சஞ்சிகை-02 வெளியீட்டு விழாவை பாடசாலை அதிபர் ஹலீம் மஜீத் தனது பதவியின் தரத்தினை குறிப்பிட்ட காரணத்திற்காக குறித்த விழாவை நடாத்த விடமாட்டேன் என்று கூறிக்கொண்டு ஒரு தொகுதி புத்தகங்களை புத்தகம் வெளியிடுவதற்கு முன்னர் விளையாட்டு மைதானத்தின் முன் பகுதியில் மாணவர்களின் முன்னிலையில் வீசி தகாத வார்த்தைப் பிரயோகத்துடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். இச்செயற்பாட்டினை பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களாகிய நாங்களும் மிகுந்த வேதனையுடன் நோக்குகின்றோம்.
அதிபர் சேவையில் தரம்-111 ஐச் சேர்ந்த குறித்த அதிபர் உத்தியோகபூர்வ பத்திரங்களில் தன்னை தரம்-11 என காட்டிக்கொண்டுள்ளதுடன் பாடசாலையில் இவர் தரம் இரண்டைச் சேர்ந்தவர் என்றே அனைவரும் நோக்கினர். இதன் அடிப்படையில்தான் குறித்த சஞ்சிகையில் அதிபரின் பெயருடன் (SLPS-II) என தட்டச்சு செய்யப்பட்டது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதேபோன்றுதான் அவர் தனது பெயருக்கு பின்னால் B.A என போடுகின்றார். ஆனால் குறிப்பிட்ட பட்டத்தினை அவர் பெறவில்லை எனவும் அவரின் நண்பர்கள் கூறுகின்றார்கள்.
அதேபோன்றே இவரின் அவசரத் திர்மானங்கள் பாடசாலை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் க.பொ.த சாதாரண தர மாணவர்களை தயார் படுத்தும் கருத்தரங்குகள் போன்ற இன்னும் ஏனைய செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளமையையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.குறிப்பாக இம்முறை தரம் 5 மாணவர்களுக்காக பிரபல்யமான நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த இலவச கருத்தரங்கிற்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இவரின் இவ்வறிவுறுத்தலே ஓரிரு புள்ளிகளில் புலமைப்பரிசில் பெறுவதற்கு முடியாதுபோன் மாணவர்களின் பெறுபேற்று வீழ்ச்சிக்குக் காரணம் என பெற்றோர்களாகிய நாங்கள் எண்ணுகின்றோம்.
மேலும் குறித்த அதிபர் தற்போதைய பாடசாலையில் கடந்த காலங்களில் பிரதி அதிபராக கடைமையாற்றி சில குழப்பங்களை சில குழப்பங்களை பாடசாலையில் அப்போது ஏற்படுத்தியதை நாம் அறிவோம். இவ்வாறு குழப்பங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தியமையால் அப்போதைய அதிபரின் சிபாரிசுக்கமைவாக வலயக் கல்வி அலுவலகத்தினால் இடமாற்றம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வேறு ஒரு பாடசாலைக்கு அனுப்பப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலையில் அனுபவம் வாய்ந்த அதுவும் அதிபர் சேவை தரம்- II இலே பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் குறிப்பிட்ட வருடங்கள் பாடசாலை ஒன்றிவேல அதிபராக கடைமையாற்றிய தகுதிவாய்ந்த அதிபர் இப்பாடசாலையிலே பிரதி அதிபராக கடைமையாற்றிக் கொண்டிருக்கும் தருணத்தில் தன்னை அதிபர் தரம்-II என அடையாளங்காட்டி அரசியல் சில்லறைகளின் உதவியுடன் பதவிக்கு வந்த இவர் தனது கடந்த இடமாற்ற அம்சங்களுக்காக பழி வாங்கும் எண்ணத்தோடு இப்பாடசாலைக்கு வந்துள்ளாரா ? என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.
முன்னர் எந்தப் பாடசாலையிலும் அதிபராகக் கடைமையாற்றாமல் பொறுப்பேற்றுக் கொண்ட இவ்வதிபரினால் பாடசாலையும் மாணவர்களும் பிழையான திசையில் கொண்டு செல்லப்பட்டு விடுமோ என நாம் எண்ணுகின்றோம்.
எனவே பாடசாலையின் எதிர்கால நலன் கொண்டு கறித்த அதிபரை இடமாற்றம் செய்து புதிதாக ஒருவர் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என நாங்கள் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றோம்.
நன்றி
பெற்றோர்கள் குழாம்