கிழக்கின் இன முறுகல்களுக்கு ஆளுனரும் பொறுப்புக் கூற வேண்டும்-கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்


கிழக்கின் தற்போது தலைதூக்கியுள்ள இனமுறுகல்களுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும் பொறுப்புக் கூற வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

தமது ஆட்சிகாலத்தில் இடம்பெறாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான இல்லாத மோதல்கள் ஆளுனரின் ஆட்சியில் மாத்திரம்வியாபித்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,

இன்று ஏறாவூர் அஹமட் பரீட் வித்தியாலயத்தில் தமது சொந்த நிதியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுடனான புத்தகப்பைகள் வழங்கும்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் முதலமைச்சர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கின் முன்னாள் முதல்வர்,

தமிழ் மற்றும் முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்படும் பாரிய அபாயம் ஏற்பட்டுள்ளது,இதனை நாம் துச்சமாக கருதி விட முடியாது.

கிழக்கு மாகாண ஆளுனரின் கைகளில் இன்று முழு அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்ற போது மாகாணத்தில் இன மோதல்கள் ஏற்படுவதைக்கண்டு பாராமுகமாக இருப்பது பல்வேறு அச்சநிலைமைகளை தோற்றுவித்துள்ளது,

எங்களுடைய ஆட்சி காலத்தில் சிறிய அசம்பாவிதங்கள் இடம்பெற்ற போதெல்லாம் உடனே எமது அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் கூடிஅது குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுத்து அவற்றை வளர விடாமல் சுமுகமாக தீர்த்து வைத்தோம் ,ஆனால் இன்று அவற்றைக் கவனத்தில்கொள்ளவும் உரிய அதிகாரங்களுடன் உள்ளவர்களுக்கு நேரமில்லாமல் இருக்கின்றது,


கிழக்கில் இனக்கலவரமொன்று ஏற்படாமல் தடுப்பதற்கான பொறுப்பு ஆளுனருக்கு இருக்கின்றது என்பதை நாம் இன்று நினைவூட்ட வேண்டிஇருக்கின்றது,

அதுமாத்திரல்லாமல் வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் நாளை தமது கடமைகளைபொறுப்பேற்பதற்கான இறுதி நாளாகும்,

வௌிமாகாணங்களில் மூன்று வருடங்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் கல்வி கற்று பின்னர் வௌிமாகாணங்களின் தூர இடங்களில் ஒருவருடம்பயிற்சியில் ஈடுபட்டு மீண்டும் எமது ஆசிரியையகளை தூர இடங்களில் பணிக்கு நியமிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்,

அதுவும் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கையில் அவர்களை வௌிமாகாணத்துக்கு அனுப்பக் கூடாது எனப் போராடுவதற்கானஆளுமைகள் கிழக்கில் இல்லையா என்று நாங்கள் கேட்க வேண்டியுள்ளது.

எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை முன்வைத்து தீர்க்க முடியாதா???

ஆனால் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் அறிக்கைகள் மாத்திரம் காணக்கிடைக்கின்றது.

எமது ஆசிரியர்களுக்கு கடமைகளை பொறுப்பேற்க வேண்டாம் நாங்கள் உங்களை சொந்த மாகாணத்தில் நியமிக்கின்றோம் என தைரியமாக யாராலும் கூறி அவர்களுக்கான நியமனங்களை சொந்த மாகாணங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆளுமைகள் யாரும் இல்லையா??

நாம் கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களை பிரதமர் மற்றும் கல்வியமைச்சருடன் பேசிஅதுவும் நடக்காத பட்சத்தில் அமைச்சில் சத்தியாக்கிரகம் செய்து கொண்டு வந்தோம்,

ஆனால் இன்று ஆளுனரின் ஆட்சியின் கீழ் வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கண்ணீருடன் நிற்கின்றனர்.

நாளை தான் அவர்களுக்கு இறுதிநாள்,அதன் பின் அவர்களை நமது மாகாணத்துக்கு கொண்டுவர முடியாது,கண்ணீருடன் தான் அவர்கள் இனிவரும்காலங்களில் பணியாற்ற வேண்டிய வேதனையான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவர்களின் கண்ணீருக்குரிய பொறுப்பை கிழக்கு மாகாண ஆளுநரும் மாகாண சபைத் தேர்தல் திருத்தத்திற்கு ஆதரவாக கையைஉயர்த்தியவர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.

ஜனநாயகத்து விரோதமாக நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தம் ஒரு போதும் சிறுபான்மை சமூகத்துக்கு நன்மையளிக்காது என்பதைநாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்,

மகளிர் பிரதிநிதித்துவ சட்டமூலத்திற்குள் மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தை திணித்தது ஜனநாய விரோதமானது மாத்திரமன்றி சிறுபான்மைஇனத்துக்கான துரோகமாகும்,

விகிதாரசார தேர்தல் முறையில்லாமல் வேறெந்த தேர்தல் முறையாலும் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த முடியாது என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிறுபான்மை சமூகத்துக்கெதிரான தேர்தல் திருத்தத்தை எம் கண்முன்னே நிறைவேற்றிவிட்டு நியாயமாக நடத்த வேண்டிய தேர்தலையும்பிற்போட்டவர்கள் தான் கிழக்கின் இன்றைய இத்தனை குழப்ப நிலைகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டும்.

எமது ஆட்சிக்காலம் நிறைவடைந்து நாம் சென்று விட்டோம் ஆனால் எம்மை விட நன்றாக ஆட்சி செய்வார்கள் என்று தானே தேர்தலையும்தள்ளிப்போட்டு ஆளுனரிடம் கையளித்தீர்கள்,

இன்று இனங்களிடையே மோதல்கள் வெடிக்கின்றன,வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற எமது ஆசிரியர்கள் நிர்க்கதியாய் இருக்கின்றார்கள்,இவையனைத்துக்கும் பொறுப்புக் கூற வேண்டிய எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளுனரும் பாராமுகமாக இருக்கின்றனர்,

ஆளுனரின் ஆட்சியை மகிழ்ச்சியுடன் வரவேற்றவர்கள் நிர்க்கதியாய் கண்ணீருடன் நிற்கும் எமது ஆசிரியர்களுக்கு பதில் சொல்ல முன்வரவேண்டும் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -