

பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளராக (நிருவாக சேவையில்) கடமையாற்றிய பிர்னாஸ் இஸ்மாயில் அவர்களின் கடந்த 2 வருடகாலம் சுகாதாரத்துறையிலாற்றிய சேவையினை பாராட்டியும்இ அவரை வாழ்த்தி வழியனுப்பிய நிகழ்வும் (17) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை கூட்ட மண்டபத்தில் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாகாணப் பணிமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு அவரின் கடந்தகால சேவையினை பாராட்டியும், வாழ்த்தியும் உரையாற்றி அவருக்கு பரிசில்களையும் வழங்கி வழியனுப்பி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
