அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த (2017) சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று (04) நடைபெற்றது.
அக்கரைப்பற்று வலய கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.அபுதாஹிர் தலைமையில் இன்று காலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட் லெப்பை கலந்து கொண்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். அத்துடன் இந்த ஆரம்ப நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.பஸ்மில் கௌரவ அதிதியாகவும் மற்றும் அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சீ.கஸ்ஸாலி, அக்கரைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.கலிலூர் றகுமான், பொத்துவில் கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.எம்.புஹாரி உட்பட ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலைகளின் அதிபர்கள், மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இவ்வருடாந்த சிறுவர் மெய்வல்லுனர் வலய மட்ட விளையாட்டு போட்டியில் சுமார் 600 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டதாக ஆரம்ப பிரிவு இணைப்பாளரும், இந்த விழாவின் ஏற்பாட்டாளருமான ஏ.எல். பாயிஸ் தெரிவித்தார்.