நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் கூட இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை

ன்று இலங்கை நாட்டில் எந்த வித ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களுமின்றிஎரிபொருள் தட்டுப்பாடு நிலவி நாடே ஸ்தம்பித நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதானது,இவ்வரசின் ஆட்சிக் குறைபாடின்றி வேறில்லையென பராளுமன்ற உறுப்பினர் பியல்நிஷாந்த தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது....

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சிக் காலம் ஒரு பொற்காலம்என்பதை இவ்வரசு காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதில் ஒன்று தான் இலங்கையில் நிலவிக்கொண்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடாகும்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சிக் காலமான யுத்தம் நிலவியசந்தர்ப்பத்தில் கூட எரி பொருள் தட்டுப்பாடு நிலவிய சரித்திரமில்லை. அப்படித் தான்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய ஆட்சி அமைந்திருந்தது.

இன்று இலங்கை நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. யாரும் வேலைநிறுத்தம் செய்யவில்லை. இப்படியான எரிபொருள் தட்டுப்பாடு எதனால் ஏற்பட்டதுஎன்ற காரணத்தை கூட வெளியில் கூறாமல் இவ்வரசு மறைக்கின்றது. அதற்கானகாரணத்தை வெளியில் கூறினால் மக்கள் தங்களது ஆட்சியை பார்த்து சிரித்துவிடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை.

சில நாட்களாக இவ் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற போதும் இவ்வரசு அவசரமாகஎந்த நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. எரிபொருள் தட்டுப்பாடு நிலவினால் நாடேஒரு கனம் ஸ்தம்பித்துவிடும். தற்போது இலங்கை நாடு அரை ஸ்தம்பித நிலைக்குவந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கனமும் பல கோடி பொருளாதார இழப்புக்கள்ஏற்படும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் இவ்வரசானது அக்கறையற்றவிதத்தில் செயற்படுவதானது இலங்கை நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தும்வகையில் அமைந்துள்ளது. இது இவ்வரசின் ஆட்சிக் குறைபாடின்றி வேறு ஏதுமில்லை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -