ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட அல்ஹிரா மகாவித்தியாலய கோபுரத்தில் ஒத்திகை நிகழ்வு இன்று (05) மதியம் 2.28 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைமையில் இடம் பெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலைச்சேனை,மாஞ்சோலை,அண்ணல் நகர்,மஹ்ரூப் நகர் போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவைக் கொண்ட மக்கள் பங்கு பற்றினர்.இதன்போது அப்பகுதி அல்ஹிரா பாடசாலை வளாகத்தில் காணப்படும் சமிக்ஞை கோபுரம் மூலமாக சத்தம் எழுப்பப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா,குச்சவெளி,மூதூர்,வெருகல் போன்ற பகுதிகளிலுமுள்ள கோபூரங்களில் ஒத்திகை இடம்பெற்றதுடன் இதில் 12 கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட உத்தியோகத்தர்கள் பங்குபற்றியதாகவும் திரூகோணமலையில் மொத்தமாக 07 சமிக்ஞை கோபுரங்கள் உள்ளதாகவும் திருமலை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுனதாஸ் தெரிவித்தார்.
இவ் ஒத்திகையின்போது மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலையை நோக்கி வந்தனர் பொதுமக்களுக்கான முன்கூட்டிய அறிவிப்பு கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழுவினால் நடைபெற்றது இதன் பிறகு மக்கள் பல்வேறு காயங்களுடனும் தட்டுத்தடுமாறி இவ் ஒத்திகையிலு பங்களிப்பை வழங்கினர்.இறுதியாக இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப்பணிகளையும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முன்னெடுத்தனர்.
இவ் ஒத்திகை நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஜீ.வவதாரனி,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.றியாத்,பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட முப்படைகளின் அதிகாரிகள் குறிப்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்திருகோணமலைக் கிளையின் நிறைவேற்று உத்தியோகத்தர் டொக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான முதலுதவிக் குழுவினர் என பலரும் பங்கு கொண்டதுடன் இவ் ஒத்திகை வெற்றிகரமாக நிறைவுபெற்றது.