சியனே மீடியா சேர்கிள் ஏற்பாடு செய்த தேர்தல் மறுசீரமைப்பு சம்பந்தமான செயலமர்வு






கஹ்ட்டோவிட்ட ரிஹ்மி -

சியனே மீடியா சேர்கிள் ஏற்பாடு செய்த "தேர்தல் முறைமை மாற்றமும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலமும்" என்ற தலைப்பிலான செயலமவர்வு, இணையத்தள வெளியீடு மற்றும் ஓய்வு பெற்ற மேலதிக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.எஸ்.மொஹமட் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் 2017 நவம்பர் 11 இல் சேர்கிளின் தலைவரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான எம்.இசட்.அஹ்மத் முனவ்வர் தலைமையில் கஹட்டோவிட்ட இமாம் சாபி நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதான வளவாளராக சிரேஷ்ட சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் அவர்களும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.

ஓய்வு பெற்ற மேலதிக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ்.மொஹமட் அவர்கள் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களது உரையும் இடம்பெற்றது.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதித்தலைவர் கலாநிதி யூசுப் மரிக்காரினால் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணிப்பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லா உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பிரதேசத்திலுள்ள அரசியல் ஆர்வளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -