விதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் பல திட்டங்கள்-ஹிஸ்புல்லா....






ஏ.எல்.டீன்பைரூஸ்-

பெ
ண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டினில் விதவைகள்,பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தேவையுடையோர் என தெரிவு செய்யப்பட்ட சுமார் 152 பெண்களுக்கு காப்புறுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் சல்மா ஹம்ஸா தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்;து கொண்டார்.

விதவைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நோய் நிவாரண காப்புறுதித் திட்டத்தினை சரியா அடிப்படையில் அமானா வங்கியூடாக உள்ளுர் தனவந்தர்களின் உதவியுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக அமுல்படுத்தி வருவதாக சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

எமது அமைப்பில் 3000 க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கத்தவர்களாக உள்ளனர் தொழில் வசதி என்பவற்றினை ஓன்லைன் ஊடாக திட்டங்களை அமுல்படுத்தி வருதுவதுடன் உற்பத்தி பெருக்கு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் என்பதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் பாரிய அளவிலான வேலைத்திட்டங்களை எமது அமைப்பின் ஊடாக அமுல்படுத்தவுள்ளதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா...

விதவைகள் என்ற அடிப்படையில் இவர்களை தெரிவு செய்து சிரிய அளவிலாவது இவ்வாறான திட்டங்கனை அமானா தகாபுல் சரியா வங்கியூடாக திட்டங்களை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினர் அமுல்படுத்தி வருவதனை இட்டு நாம் மகிழ்ச்;சியடைகின்றோம்.

நாங்கள் வேறு சில திட்டங்கள் மூலம் பல குடும்பங்களுக்கு மாதாந்தம் 7500.00 அமானா வங்கியினூடாக செலுத்தி வருகின்றோம் என்று தெரிவித்தார்.

இவ்வாறான திட்டங்கள் ஊடாக விதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் அமானா வங்கியுடன் நாங்கள் பேசி அறிக்கைகளை சமர்பித்து எதிர்காலத்தில் செய்ய முடியும் என்பதனையும் தெரிவிக்க விரும்புவதுடன் இன்றைய திட்டங்களை அமுல்படுத்த 100 பேருக்கு தான் உதவுவதாகவும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -