இன்று கல்முனையிலும் பாரிய ஆர்ப்பாட்டம்! நகர் ஸ்தம்பிதம்!




காரைதீவு நிருபர் சகா-

ல்முனை மாநகரசபைப்பிரதேசத்தை நான்காகப் பிரிக்கக்கோரியும்
சாய்ந்தமருதைப்பிரிக்கவேண்டாமெனக்கோரியும் இன்று (31) கல்முனையில் பாரிய
ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம்
ஏற்பாடு செய்த இவ்வார்ப்பாட்டத்தால கல்முனை மாநகரம்
ஸ்தம்பிதமடைந்துள்ளது.
கல்முனை பசார் தொடக்கம் கல்முனைக்குடி வரையிலான கடைகள்யாவும்
பூட்டப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இயல்புநிலை
ஸ்தம்பிதநிலையடைந்துள்ளது. பொலிசார் பெருமளிவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
விழித்தெழு கல்னைமுயானே கொதித்தெழு என்ற துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டன.
அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.;

கல்முனையிலிருந்து சாய்ந்தமருது தனியே பிரிந்த செல்லுமாயின் கல்முனையில்
முஸ்லிம் பெரும்பான்மை அழக்கப்பட்டு தமிழ்சகோதராகளின் பிடிக்கள்
நமதுமாநகரசபையும் மக்களும்அகப்படுவர் என்பதில் எள்ளளவும் சந்தேகிக்க
வேண்டியதில்லை .

நகரிலுள்ள அலுவலகங்கள் வங்கிகள் சந்தைத்தொகுதி என்பன இம்மறியல்
போராட்டத்தினால் இயங்கவில்லை.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நேராக கல்முனை பிரதேச செயலகத்தை அடைந்து பிரதேச
செயலாளரிடம் மகஜரைச் சமர்ப்பித்தனர்.
கல்முனையிலிருந்து சாய்ந்தமருதைப் பிரிக்க ஒருபோதும் நாம்
அனுமதிக்கமாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பரித்தனர்.
பல சுலோக அட்டைகளையும் அவர்கள் தாங்கியவண்ணம் கத்திவந்தனர்.
கல்முனை பொலிஸ்நிலையச்சந்திக்கு அப்பாலுள்ள தமிழ்ப்பிரதேசம் சுமுகமாக
இயங்கியது. கடைகள் பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டு இயல்பாகவிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -