பரீட்சனின் "முரண்பாட்டு சமன்பாடுகள்" கவிதைப்பிரதி வெளியீட்டு அறிமுகமும்




ரீட்சனின் "முரண்பாட்டு சமன்பாடுகள்" கவிதைப்பிரதி வெளியீட்டு அறிமுகமும் பிரதிமீதான வாசிப்பு அனுபவப்பகிர்வும் இன்று அகர ஆயுதம் அமைப்பின் ஏற்பாட்டில் DMK Associat நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நிந்தவூர் பொது நூலகத்தில் மிகவும் சிறப்பாக புத்தங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது..

கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாரூக் அவர்களின் தலைமையில் நடந்த இன்நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக எழுத்தாளருமான, அரசியல் சமூக சிந்தனை செயற்பாட்டாளருமான அஷ்சேக் முபாரக் அப்துல் மஜீத் கலந்து சிறப்பித்ததோடு கெளரவ பிரதியையும் பெற்றுக்கொண்டார்..

கவிதைப்பிரதியை அகர ஆயுதத்தின் தலைவரும் கவிஞருமான இலக்கியன் முர்சித் வெளியிட்டு வைக்க பிரதிமீதான வாசிப்பு அனுபவப்பதிவை ஆய்வாளரும் எழுத்தாளருமான அப்துல் ரசாக், ஆய்வாளர் மர்லீன், ஆய்வாளரும் எழுத்தாளருமான இமாம் அத்னான் ஆகியோர் நிகழ்த்தினர்.

கனதியான இலக்கிய ஆளுமைகளின் பிரசன்னத்துடன் நடந்த இன்நிகழ்வு குறுகிய நேரத்தில் நிறைவான இலக்கிய மணமும் சுவையும் நிறைந்ததாக நடாத்தி முடிந்தமை சிறப்பபிற்கும் பாராட்டிற்கும் உரியதாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -