பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஏறாவூர் பிதேசத்தில் நிர்மானிக்கப்படும் புதிய தார் வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு (05.11) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் போது புன்னக்குடா குறுக்கு வீதிகள்,புதிய சந்தை குறுக்கு வீதிகள், ஜிப்ரி தைக்கா குறுக்கு வீதிகள், காந்தியார் குறுக்கு வீதிகள், புகையிரத நிலைய குறுக்கு வீதிகள், மௌலானா குறுக்கு வீதிகள் உள்ளடங்களாக 32 வீதிகளுக்கான அபிவிருத்திப்பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முன்னால் நகர முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லீம், முன்னால் ஏறாவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.சி.கபூர், சாலி ஹாஜியார் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நளீம், உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.