அமைச்சர் றிசாத்தின் கட்டார் உறவால் இலங்கைக்கு அதிக இலாபம்

ஊடகபிரிவு-

'கட்டார் - இலங்கை இடையிலான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவுக்கான கூட்டு ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இருதரப்பினருக்கும் பாரியளவில் நன்மையை பெற்றுக்கொடுப்பதோடு தற்போது காணப்படும் 45 மில்லியன் அமெரிக்க டொலுருக்கு அதிகமான அளவிற்கு இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க உதவுமென நான் நம்புகிறேன'என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பில் கடந்த இரண்டு நாட்கள் (30-31) சினமன் லேக் ஹோட்டலில் இடம்பெற்ற கத்தார்-இலங்கைக்கிடையிலான பொருளாதாரம், வர்த்தகம்மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவுக்கான கூட்டு ஆணைக்குழுவின் இறுதி அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் இதனைதெரிவித்தார்.

இறுதி அமர்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கட்டார் நாட்டின் வர்த்தக அமைச்சரும் சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து அமைச்சர் ரிஷாட்பதியுதீனும் கட்டார் நாட்டின் பொருளாதாரம் வர்த்தகத் துறை அமைச்சர் அஹமட் பின் ஜெஸ்மின் அல்-தானியாவும் புரிந்துணர்வு வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இவ் அமர்வில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில்: 

டோஹாவில் கடந்த வாரம் உயர்மட்ட இருதரப்புக் கூட்டம் முடிவுக்கு வந்தவுடன், எங்கள் இருதரப்பு வர்த்தக உறவுகள் புத்துயிர் பெற்றதுடன் எங்களுக்கு அதனை விரிவுபடுத்தவதற்கான நேரம் வந்துள்ளது.

இரண்டு நாள் கொண்ட இந்த அமர்வு பயனுள்ளவையாகவும், மின்வலு எரிசக்தி , விமான போக்குவரத்து, விருந்தோம்பல்துறை மற்றும்விவசாயத்துறையுடனான பரஸ்பர ஒத்துழைப்பின் மீதான பல ஆக்கபூர்வமான நேர்மறையான விளைவுகள் ஏற்படுத்தபட்டிருப்பதாக கத்தார்-இலங்கைக்கிடையிலான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவுக்கான கூட்டு ஆணைக்குழுவின் இரு நாள் அமர்வில் கலந்துக்கொண்ட எனது அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக இலங்கையில் தூய்மையான ஆற்றலுக்கான கட்டார் LNG வாயுவைப் ( (LNG gas) ) பயன்படுத்துவதில் கலந்துரையாடல்கள் இந்த அமர்வின் புதிய அம்சமாகும். கொழும்பில் இரண்டு நாள் கொண்ட அமர்வு இரு தரப்பினருக்கும்பாரியளவில் நன்மையை பெற்றுக்கொடுப்பதோடு தற்போது காணப்படும் 45 மில்லியன் அமெரிக்க டொலுருக்கு அதிகமான அளவிற்கு இருதரப்புவர்த்தகத்தை அதிகரிக்க உதவுமென நான் நம்புகிறேன்.

1976 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் கட்டார் இடையேயான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டன. அதன் பின்னர் அந்த உறவுகள் பல்வேறு துறைகளில்பலப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் கட்டாருக்கிடையிலான பொருளாதாரம்,வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் காணப்படும் உறவுகளைவலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் உரிய முதலீகளை மேற்கொள்ளுவதனூடாக இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்துவதற்குகட்டார் முயற்சித்து வருகின்றது என்றார் அமைச்சர்.

கூட்டுவர்த்தக வழிமுறை மூலம், இருதரப்பு வர்த்தக உறவுகளை அதிகரிக்கவும், வர்த்தக தொகுதிகளை அதிகரிக்கவும், முதலீட்டு இலக்குகளுக்கு உதவும்பயனுள்ள திட்டங்களை உருவாக்குவதற்கும் கட்டார் எதிர்பார்கின்றது என கட்டார் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் அஹமட் பின்ஜெஸ்மின் அல்-தானி இறுதி அமர்வில் உரையாற்றும் போது கூறினார.
2016 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்ற அளவு 223 கட்டார் ரியாலை அடைந்தது. அத்துடன், கட்டாரில் 210 இலங்கைநிறுவனங்கள் கூட்டுப்பங்காளாக 45.5 மில்லியன் கட்டார் ரியாலை முதலீடு செய்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திட்ட புரிந்துணர்வு வர்த்தக உடன்படிக்கை , எங்களது பொருளாதார உறவுகளை பலப்படுத்துவதில் ஒருமுக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

எங்கள் வெளிப்படையான பொருளாதார திறனில் இலங்கை ஒரு முக்கிய முதலீட்டு மற்றும் வர்த்தக பங்காளி என கட்டார் கருதுகிறது, இது அடுத்தகட்ட கூட்டுஒத்துழைப்பில் , பல முக்கிய துறைகள் மீது எங்ளை இட்டுச்செல்ல் வழிவகுக்கும், குறிப்பாக விவசாயத் துறையில் தனியார்துறையினருக்கும் வர்த்தகர்களுக்கும் இடையேயான உறவை மேலும் மேம்படுத்துவதற்கும் இரு தரப்பினரிடமிருந்து ஒரு பாரிய பங்களிப்பைசெயல்படுத்;துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கத்தார், அஹமட் துறைமுகமானது மூலோபாய துறைமுகங்கள் மற்றும்; கப்பல் சேவைகளுடன் நேரடி வர்த்தக வளங்களை வென்றுள்ளது. உலகெங்கிலும்150-க்கும் மேற்பட்ட பயண இலக்குகளை எடுத்துச் செல்லும் தேசிய சாதனமாக இத்துறைமுகம் செயற்பட்டு நேரடி வர்த்தக இலக்குகளின் வளர்ச்சியினைபெற்றுள்ளது.

2016 ஆம் ஆண்டளவில் இலங்கை மற்றும் கட்டார் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மூலம் 45 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டது. அதேவேளை கட்டாருக்கான ஏற்றுமதி மூலம் 15 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வருமானமாக பெற்றதுடன் இலங்கைக்கான கட்டாரின்ஏற்றுமதி 30 மில்லியன் அமெரிக்க டொலர் காணப்பட்டது.

நர்hட்டில் இலங்கையில் இருந்து ஏற்றுமதியில் 37% சத வீதமான வாழைப்பழங்கள் அதனை தொடர்ந்து உணவு தயாரிப்புக்கள், தேயிலை,காய்கறிகள மற்றும்; டயர் ஆகியவற்றை கட்டார் பெற்றுக்கொண்டது, இதற்கிடையில், கட்டாரில் இருந்து இலங்கையின் முதன்மை இறக்குமதியாகஎத்தியிலின் பாலிமர்ஸ் காணப்படுகின்றது.

இதேவேளை இரண்டு நாடுகளின் மட்டுப்படுத்தப்பட்ட ஏற்றுமதி கூடைகளில் காணப்படும் தயாரிப்புக்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகவளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக காணப்படுவதனை இலங்கை வர்த்தக திணைக்களம் அவதானித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -