விளையாட்டின் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையினையும் சகோதரத்துவத்தினையும் கட்டியெழுப்ப முடியும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்





எம்.ரீ. ஹைதர் அலி-

விளையாட்டு என்பது பொழுதுபோக்கு மாத்திரமன்றி அதனூடாக பல்வேறு பிரதிபலன்களை பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக விளையாட்டின் மூலம் எமது இளைஞர்களுக்கிடையிலான ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன சிறந்த முறையில் கட்டியெழுப்படுவதற்குரிய சிறந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகின்றது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். 

காத்தான்குடி எலைட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் 2017.11.12ஆந்திகதி காத்தான்குடி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்ற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...

எனவே விளையாட்டுத் துறையினை அபிவிருத்தி செய்வதனூடாக எதிர்காலத்தில் விளையாட்டுக்கழகங்களை மேலும் வளப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் எமது பிரதசத்தில் தற்போது மூன்று மைதானங்கள் மாத்திரமே காணப்படுகின்றது. அதிலும் ஒரு மைதானம் பாடசாலை மைதானமாகவுள்ளது. மேலும் தற்போது எமது பிரதேசத்திலுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக வேறு மைதானங்களை அமைப்பதும் சாத்தியமற்றதாகும்.

ஆகவே இருக்கின்ற மைதானங்களை வினைத்திறனான விதத்தில் பயன்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.

எனவே மைதானங்களுக்கு தேவையான மின்விளக்குகளை அமைத்து மைதானங்களை இரவு நேரங்களில் உதைப்பந்தாட்ட விளையாட்டிற்கும் பகல் நேரங்களில் கிரிகட் விளையாட்டிற்கும் பயன்படுத்துவதற்குரிய முறையில் விளையாட்டுக் கழகங்களுக்கு சந்தற்பத்தினை ஏற்படுத்தி வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம் என தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -