தலவாக்கலை பி.கேதீஸ்-
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் 5.11.2017 இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார ,மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் , உடபலாத்த பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் செல்லமுத்து மற்றும் கல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள் , பாடசாலைகளின் அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டதை இங்கு காணலாம்.