வாழைச்சேனை முர்சித்-
வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் திருடர்கள் வருகை தந்து வீட்டின் கூரையை உடைத்து உள் இறங்கி திருடிச் செல்வதாகவும், சில வேளைகளில் தூக்கம் வரக்கூடிய மருந்துகளை விசிறி விட்டு வீட்டின் உள்ளவர்களை மயக்க நிலையில் வைத்து விட்டு திருடிச் செல்வதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
பகலில் வீதிகளில் நடமாடி விட்டு இரவு நேரங்களில் திருடர்கள் வருகை தந்து திருடிச் செல்லக் கூடிய நிலை காணப்படுகின்றது. இதனால் மக்கள் தற்போது பயத்தில் அச்சத்தில் இரவு நேரங்களில் வாழ்கின்றனர்.
இவ்வாறான சம்பவங்களை உடனடியாக தடுக்கும் வகையில் பொலிஸார் மற்றும் பிரதேச அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் திருட்டுச் சம்பவத்தை தடுக்க முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.