வாழைச்சேனை முர்சித்-
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மின்சாரம் இல்லாத நேரத்தில் பயன்படுத்துவதற்கு மின்பிறப்பாக்கி இல்லாத காரணத்தால் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் பிரதேச செயலக அதிகாரிகள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
பிரதேச செயலகத்திற்கு இறப்பு பிறப்பு பதிவு, வாகன அனுமதிப் பத்திரம், போன்றவற்றை பெறுவதற்காக வருகை தந்த மக்கள் மின்சாரம் இன்றியும், மின்பிறப்பாக்கி இல்லாத காரணத்தினாலும் தங்களுடைய சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு மின்பிறப்பாக்கி ஒன்றை வழங்குவதன் மூலம் இப்பிரதேச மக்களின் நேரம் மற்றும் பொருளாதாரத்தை வீணடிக்காமல் சேவையை வழங்க முடியும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.