க.கிஷாந்தன்-
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா வனராஜா பகுதியில் 11.11.2017 அன்று பகல் 1.30 மணியளவில் லொறியொன்று தொலைபேசி கம்பத்தினை உடைத்து கொண்டு விபத்துக்குள்ளாகியதாக அட்டன் பொலஸார் தெரிவித்தனர்.
அட்டனிலிருந்து நோர்வூட் நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரதேசங்களுக்கு தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இவ்விபத்து ஏற்படும் போது லொறியில் சாரதியும் மற்றுமொருவரும் இருந்துள்ளதாகவும் தெய்வாதினமாக எவருக்கும் எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.
லொறியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் செய்த ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.