தலவாக்கலை பி.கேதீஸ்-
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு எதிராகவும் அமைச்சர் திகாம்பரத்தின் உருவ பொம்மையை எரித்தமைக்குக் கண்டனம் தெரிவித்தும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் தலவாக்கலை நகரில் 31.10.2017 செவ்வாய்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலவாக்கலை பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் அமைச்சர் திகாம்பரத்தின் பிரத்தியேக செலாளருமான நகுலேஸ்வரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித்தலைவர் சிவனேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அட்டன் தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தின் பெயர்ப் பலகையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை மாற்றியமையைக் கண்டித்து, இ.தொ.காவின் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அமைச்சர் ப.திகாம்பரத்தின் கொடும்பாவியையும் எரித்தனர்.இதனைக் கண்டித்தே தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களால் தலவாக்கலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.