மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் மருதமுனை கலை ,லக்கிய பேரவையினால் நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதி வரையான ,ரண்டு மாதங்களுக்கு தினகரன் பத்திரிகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று(07-11-2017)நடைபெற்றது.
மருதமுனை கலை இலக்கிய பேரவையின் தலைவரும்,கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளருமான ஏ.ஆர்.எம்.சாலிஹ், பேரவையின் பொருளாளர் எஸ்.எல்.நழீம் ஆகியோர் அதிபர் பி.எம்.எம்.பதுறுத்தீன்,நூ}லகத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் எஸ்.எம்.எம்.அபூபக்கர் (நஜீம்) ஆகியோரிடம் வழங்கி வைக்கப்பட்டன.