உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நாங்கள் பிற்போட்ட ஒன்றல்ல. அதற்கு எங்களுக்கு விருப்பமும் இல்லை. இதனைச் செய்தது ஜனாதிபதியே அல்லாமல் பிரதமர் அல்ல. ஆனால் இவர்கள் சப்தமிடுவது ஐதேக தேர்தலை பிற்போடுகிறது என்று. இவர்கள் மறந்த விடயமொன்று தான், நாங்கள் பொதுத் தேர்தல் முடிந்த கையோடு உள்ளுராட்சி மன்றங்களைக் கலைத்திருந்தால் 100 வீத பலனை ஐதேக பெற்றிருக்கும். நாங்கள் அந்த சகல பலன்களையும் மூலையில் போட்டு விட்டு சிறந்த நிர்ணய முறையில் தேர்தல் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு காலம் எடுத்தோம்.
எவ்வாறென்றாலும் எல்லாவற்றையும் தாண்டி தேர்தலை நடாத்துவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். எம்முடைய அணியை பலப்படுத்தி உள்ளுராட்சி மன்றங்களையும் வென்று மக்களுக்கு சிறந்த சேவையளிக்க நாம் தயார்" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

சென்ற 05 ஆம் திகதி பிபிலை, புலுபிடிய பிரதேசத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "இன்று சுதந்திரக் கட்சியினர் இரண்டாகப்பிரிந்து அவர்களுக்கிடையில் சண்டையிட்டுக்கொள்கின்றனர். எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக்கட்சியினர் ஐதேக அல்லாது அவர்களது அணியுடனாகும். அது மட்டுமல்லாது தேசிய சுதந்திர முன்னணியும் இரண்டாகப் பிளவடைந்துள்ளது. முன்னைய காலங்களில் எமது கட்சி சிறு சிறு துண்டுகளாக உடைந்த போது மகிழ்ச்சியடைந்தவர்கள் இன்று அவர்களுக்குள் பிளவை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு வெல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானதாகும்.

இந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் நாட்டில் ஜனநாயகம் உருவாக வழியமைத்தோம். 100 நாள் திட்டத்தில் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான திட்டத்தை உருவாக்கினோம். இவை சிலருக்கு மறந்திருந்தாலும் நாட்டு மக்களுக்கு ஞாபகம் இருக்கிறது. கேஸ் போன்ற அத்தியாவசியமானவைகளுக்கு விலையை குறைத்தோம்.
அரசாங்க நிர்வாக அமைச்சர் என்ற வகையில் எனக்குத் தெரியும், அரச ஊழியர்களது அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படாமை. அதற்காகத்தான் அவர்களது சம்பளத்தில் ரூபா 10 000 அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம்.இதனால் 14 இலட்சம் அரச ஊழியர்கள் பாரிய நன்மையை அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல் ஓய்வுதியம் பெறுபவர்களின் பிரச்சினைகளை நீக்கினோம்.

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளைக் குறைத்தோம். இவை நாட்டு மக்களுக்காகவே செய்தோம். அரசியல் நலனுக்காக அல்ல. இன்று பொது எதிரணியினர் நாம் புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டைப் பிரிக்கப்போவதாக சப்தமிட்டுத் திரிகின்றனர். இது பெரிய பொய்யாகும். இந்த வெல்லஸ்ஸை என்பது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் வாழும் இடமாகும். இந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் எப்போதும் நாட்டைப் பிரிப்பதற்கோ புத்த தர்மத்தை நாசப்படுத்துபவற்றுக்கோ ஆதரவளிக்கப் போவதில்லை.
எமது அரசாங்கம் அப்படியான அரசியலமைப்பைக் கொண்டு வராது. இவ்வாறானர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற நாட்டு மக்களுக்கு எதிர்வரும் தேர்தலில் பாரிய பொறுப்பு இருக்கிறது.
எவ்வாறாயினும் இவ்வாறானவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்லர். மொனராகலை மாவட்டத்தில் இந்த தேர்தலுக்கு நல்ல ஆயத்தத்துடன் நீங்கள் முகங்கொடுக்க வேண்டும் என்பதனை ஞாபகப்படுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.