கஹட்டோவிட்ட ரிஹ்மி -
இவருடைய தந்தை ஒரு பாதிரியாராவார். சிறு வயதில் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் இடமொன்றில் பணியாற்றினார். பின்னர் லண்டன் சென்றார். சில காலம் ஆசிரியராகப் பணி புரிந்த பின்னர் மதப்பணிக்குத் திரும்பி தென் பெல்ஜியத்தில் ஒரு மிஷனரியாக பணியாற்றினார். அங்கு வைத்து அங்குள்ள ஏழ்மை மிக்க மக்களை வரையத் தொடங்கினார். அங்குதான் தனது முதல் ஓவியமான "உருளைக் கிழங்கு உண்போர்" எனும் ஓவியத்தை வரைந்தார்.
இங்கு சுவாரசியம் என்னவெனில் வான் கோ தனது 30 வது வயதிலேயே முதலாவது ஓவியத்தை வரைந்தார். அதற்கு முன்னர் சுகயீனமுற்று இருந்தார். அவரது தம்பி தியோ அவருக்கு நிதியுதவி செய்திருந்தார். அவரது ஆரம்ப படைப்புக்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை சித்தரிப்பதாக இருந்தது.
வான் கோ பைபோலர் டிசோர்டர் எனும் மன நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் சரியாக சாப்பிடாமல் இருந்ததுடன் அதிகமாகக் குடித்தார். ஒரு சமயத்தில் மனச்சோர்வு அதிகமாகி தனது இடது காதின் ஒரு பகுதியை அறுத்துக்கொண்டார். ஒரு கால கட்டத்தில் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு பிரிதொரு பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு ஹோமியோபதி மருத்துவர் ஒருவரின் கண்காணிப்பில் இருந்தார். என்றாலும் தொடர்ச்சியான மன அழுத்தம் காரணமாக 1890 ஜுலை 27 இல் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தார்.
வான் கோ பிறப்பதற்கு சரியாக ஓராண்டுக்கு முன்னர் பிறந்த அவரது சகோதரர் சில நாட்களுக்குப் பின் இறந்தார். இதனால் அதே திகதியில் பிறந்த வான் கோ இற்கு அண்ணனின் பெயரை வைத்தனர். இது சிறு வயதில் இருந்து வான் கோ இற்கு ஒரு வித தாழ்வு மனப்பாங்கை உருவாக்கியது. வான் கோவின் மற்றுமொரு சகோதரர் தியோ வான் கோவும் புகழ்பெற்ற ஓவியராவார். இவர்களது தந்தை ஒரு மத போதகராவார். அத்துடன் அவருக்கு மூன்று சகோதரிகளும் உள்ளனர். குடும்பம் வறுமையில் வாடியது. தாழ்வு மனப்பான்மை, வறுமை இளமையிலேயே வான் கோவை முன்கோபக்காரராக மாற்றியதுடன் தந்தையால் கூட அவரை அடக்க முடியவில்லை.
தூரிகை வாங்குவதற்குக் கூட பணமில்லாத வான் கோ சகோதரர் தரும் பணத்தையே பயன்படுத்தி வந்தார். தனது கவனங்கள் அத்தனையையும் ஓவியங்களில் குவித்து ஆதிகால குகை ஓவியங்கள், கேட்விக் ஓவியங்கள், மறுமலர்ச்சி ஓவியங்கள், இயற்கை ஓவியங்கள் என ஓவியத்தில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார். "உணர்வு வெளிப்பாடு" என்ற புதிய பாணியை தனது ஓவியங்களில் அறிமுகப்படுத்தினார். அவரது ஓவியங்கள் வண்ணமயமாக இருக்கும். அவரது ஓவியங்களில் உலகப் புகழ் பெற்றது பன்னிரெண்டு சூரிய காந்தி பூக்கள் நிறைந்த பூச்சாடி ஓவியமாகும்.
வான் கோவின் ஓவியங்களில் அநேகமானவை அவர் இறப்பதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டவையாகும். அவர் உயிருடன் இருக்கும் காலத்தில் அவர் மனநோயாளி என்ற ஒரே காரணத்திற்காக அவரது ஓவியங்களை யாரும் மதிக்கவில்லை. அத்துடன் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் அவரால் அவரது ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே விற்க முடிந்ததுடன், அதுவும் அவரது வீட்டு உரிமையாளருக்கு வாடகைப்பணத்தை செலுத்த வசதியில்லாமல் வழங்கியதாகும்.
வான் கோ நூதனசாலை இன்று 1973 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் அமைக்கப்பட்டது. வான் கோவின் மருமகனான வான் கோ என்ற அதே பெயரைக் கொண்டவரால் இது ஆரம்பிக்கப்பட்டது. இங்கு வான் கோவின் படைப்புக்கள் அதிகமாகப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது நெதர்லாந்தின் இரண்டாவது மிகப்பிரசித்தமான நூதனசாலையாக இருப்பதுடன் வருடாந்தம் இதற்கு 1.5 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். அத்துடன் வருகை தருபவர்களில் 85 வீதமான மக்கள் வெளிநாட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்று நவீன ஓவியங்களின் செல்வாக்கு மிக்கவர் வின்சன்ட் வான் கோ என்று புகழப்படுகிறார். அவரது ஓவியங்கள் இன்றளவும் உலகில். அதிக விலைக்கு விற்பனையாகும் ஓவியங்களாக உள்ளன. அவரது சில ஓவியங்கள் 100 மில்லியன் டொலருக்கும் அதிகமாக விலை போய் இருக்கின்றன. வாழும் போது வின்சன்ட் வான் கோ ஒரு நோயாளி என்ற ஒரே காரணத்திற்காகக் கணக்கில் எடுக்காக இவ்வுலகம், அவரின் மரணத்தின் பின் தலை மேல் வைத்துப் போற்றிப் புகழ்கிறது ஏன் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.