சொந்தமான சொகுசு பேரூந்து அதிவேக நெடுஞ்சாலையில் வைத்து வாகனம் ஒன்றை தவறான முறையில் முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அவ்வேளையில் மேற்படி பேரூந்தை செலுத்திய சாரதியை சோதனையிட்ட பொலிசார் சாரதி மதுவருந்திய நிலையில் பேரூந்தை செலுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்து ஜாஏல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
பின்னர் கொழும்பிலிருந்து பிறிதொரு சாரதி வரவழைக்கப்பட்டு அன்று நள்ளிரவு தாண்டியதன் பின்னரே குறித்த தனியார் சொகுசு பேரூந்து பயணத்தை மீள ஆரம்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.(மநி)