அரசாங்க தகவல்திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கும் கட்டார் அரசாங்கத்திற்கும் இடையில் நிலவி வரும் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் 2 நாடுகளுக்கும் விஜயம் செய்யும் இராஜதந்திரிகள், விசேட மற்றும் கடமைகளுக்கான கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கை மற்றும் கட்டார் பிரஜைகளுக்கு விசா அனுமதியை பெற்றுகொள்வதில் இருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் கட்டார் அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்காக உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன சமர்ப்பித்த ஆவணங்களிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்தார்.