இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்திருந்தார்.
ஒட்டாவா உடன்பாடு என்று அழைக்கப்படும், கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் 160 நாடுகள் அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன. காலம் சென்ற பிரித்தானிய இளவரசி கம்போடியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் கண்ணி வெடிகளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தார்..பிரித்தானியா தயாரித்துக் கொண்டிருந்த தரைக் கண்ணி வெடிகளுக்கு எதிரான பயணத்தை ஆரம்பித்தார்.
இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த வருடம் மார்ச் மாதம் அனுமதி அளித்திருந்தது. எனினும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இன்னமும் இதற்கு பச்சைக்கொடி காண்பிக்கவில்லை.
கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, ”இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும்.
இந்த உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாமல் இருப்பதற்கும், நல்லிணக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை“ என்று தெரிவித்துள்ளார்.அமைச்சரவை அனுமதி அளித்தும் பாதுகாப்பு அமைச்சு இன்னும் மறுத்து வரும் மர்மம் என்ன? இதன் பின்னால் இருப்பது என்ன ?
அப்போதைய பாதுகாப்பு செயலர் முதல் இப்போதய செயலர் கபில வைதியரத்னா வரை ஒட்டாவா பிரகடனத்தில் இன்னும் இலங்கை கையொப்பம் இடவில்லை .