முஸ்லிம்களுக்கு சுயாட்சி அலகு வழங்க தயார் - மாவை சேனா­தி­ராஜா

தமி­ழர்­களின் தாயக பூமி­யான வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்டு சமஷ்டி அடிப்­ப­டையில் உள்­ளக சுய­நிர்­ண­யத்­து­ட­னான அதி­கா­ரப்­ப­கிர்வு செய்­யப்­பட்டு நியா­ய­மான தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும். இதன்­போது முஸ்­லிம்­களும் தமி­ழர்­க­ளுடன் சகோ­த­ரர்­க­ளாக வாழும் வகை­யி­லான அவர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றக்­கூ­டி­ய­வா­றான சுயாட்சி அல­கொன்றை வழங்­கு­வ­தற்கும் தயார் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழரசுக்­கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

நாம் இணைந்த வட கிழக்கில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்ட சமஷ்டி முறை­மையை கோரு­கின்­ற­போது தற்­போது முஸ்லிம் சகோ­த­ரர்கள் சிலர் அதனை எதிர்க்­கின்ற நிலை­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. 

கடந்த காலத்தில் பெருந்­த­லைவர் அஷ்­ர­புடன் மேற்­கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வின் படி வட­கி­ழக்கின் பூர்­வீக சகோ­தர இனத்­த­வர்­க­ளான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் இணைந்தே அதி­கா­ரங்­களை பகிர்ந்து கொள்­வ­தெ­னவும் விசே­ட­மாக வடக்கு கிழக்கு இணை­கின்­ற­போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான சுயாட்சி அல­கொன்றை வழங்­கு­வ­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம். அது குறித்து நாம் தற்­போ­தைய தலை­மை­க­ளு­டனும் பேசு­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

கிழக்கு மாகாண சபையில் நாம் கூட்­டணி ஆட்­சியை முன்­னெ­டுத்­துள்ளோம். முஸ்லிம் பிர­தி­நி­தியை முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்க அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்ளோம். ஆகவே முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு நாம் அநீதி இழைக்­கப்­போ­வ­தில்லை. இணைந்த வடக்­கி­ழக்கில் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பகிர்கின்றபோது முஸ்லிம்களின் விடயத்தினையும் நாம் கருத்தில் கொள்வோம். ஆகவே அதற்கான கலந்துரையாடல்களை இதய சுத்தியுடன் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுகின்றோம் என்றார். \

VV

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -