மு.இராமச்சந்திரன்-
அட்டன் கல்வி வலயம் கார்பெக்ஸ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 11.11.2017 கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
கல்லூரியின் அதிபர். வீ.உதயகுமார் தலைமையில் இடப்பபெற்ற இந் நிகழ்வில் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் போட்டிப்பரிட்சையில் சித்திபெற்று உதவி கல்வி பணிப்பாளர்களாக தெரிவாகிய கார்பெக்ஸ் கல்லூரியின் பழையமாணவர்களான. எம்.எஸ்.இங்கரசால் . எஸ்.எஸ். ரமேஸ்பாபு.ஆர்.உமேஸ்நாதன் மற்றும் பல்கலைக்கழகம் சென்ற. ஏ.பார்த்தீபன்.கே.நிலல்ராஜன் உட்பட சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர் மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழகள் வழங்கப்பட்டன
நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.