சாதிக்க தயாராகும் அட்டாளைச்சேனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தென்கிழக்கு பிராந்தியத்தின் கல்விக் கேந்திரமாக திகழும்
அட்டாளைச்சேனையில் கடந்த கால அனுபவங்களின் படி பல்கலைக்கழக
மாணவர்களை வழிநடாத்துகின்ற ஒரு நிலையான இயக்கம் காணப்படவில்லை என்பது தெளிவான ஒன்றாகும்.

இதன் அடிப்படையில் தற்போது அரச
பல்கலைக்கழகங்களில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், மருத்துவம்,
சட்டம், தொழிநுட்பம் மற்றும் பொறியியல் போன்ற பல துறைகசார்ந்த
உள்நிலைப் பட்டதாரிகளை உள்ளடக்கி நீண்டகால நோக்கத்தின்
அடிப்படையில் அட்டாளைச்சேனை 'பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்'
தற்போது தாபிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் அட்டாளைச்சேனைப் பிராந்தியத்தின் கல்விரூபவ்
கலாச்சாரரூபவ் சமூகரூபவ் மார்க்க சம்பந்தபட்ட விடயங்களில் முழுiமான மற்றும்
காத்திரமான பங்களிப்பை வழங்க தயாராக இருக்கின்றது. மேலும் கடந்த
காலங்களில் பல்கலைக்கழகங்களில் கற்று வெளியான சகல துறைசார்ந்த
பட்டதாரிகளின் ஆலோசனைகளுக்கமைவாக எதிர்வரும் காலங்களில்
செயற்பட தயாராக உள்ளது என்பதுடன் சமகாலத்தில் எமது பிராந்தியத்தில்
நிலவி வரும் கல்விசார் பிரச்சினைகள் தொடர்பில் காத்திரமான பங்களிப்பினை
வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்பாட்டாளர்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
அட்டாளைச்சேனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -