
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் , க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை அதிகரிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியமைக்கு ஆதரவு தெரிவித்து மலையக நகரங்களில் 02.11.2017 மாலை 3.00 மணியளவில் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் அட்டன் மற்றும் பொகவந்தலாவை நகரங்களில் ஒன்றுகூடி பாற்சோறு சமைத்து பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி ஆராவாரங்களில் ஈடுபட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபை மூன்றாக பிரிக்கப்பட்டு மஸ்கெலியா, நோர்வூட், அம்பகமுவ பிரதேச சபைகளாகவும் நுவரெலியா பிரதேச சபை மூன்றாக பிரிக்கப்பட்டு நுவரெலியா, கொட்டகலை, அக்கரப்பத்தனை ஆகிய பிரதேச சபைகள் அதிகரிக்கபட்டமைக்கு ஆதரவு தெரிவித்தே 02.11.2017 அன்று இந்த மகிழ்ச்சி ஆராவாரத்தில் ஈடுபட்டனர்.