நோய்களுக்கு சிகிச்சை முடிந்ததும் தாங்கள் விரும்பியமுரையில் பணம்களைப் பெற்றுக்கொள்ளும் இவர்களால் ஏன் தொலைபேசிக்கு சரியாக பதில் வழங்க பயிற்றப்பட்ட ஒருவரை நியமிக்க முடியாது.
பல்லாயிரங்களில் பணம் பெறும் வைத்தியசாலைகளின் இந்த நிலை கண்டிக்கத் தக்கது என இன்று ஒரு முதியவர் கருத்துத் தெரிவித்தார்.
இன்று 17.11.2017 மாலை 4.50 மணியளவில் மட்டக்களப்பு ஜீ.வி வைத்தியசாலை ஒரு வைத்தியரின் வருகை தொடர்பில் கேட்டறிய
065 222 5696 இந்த இலக்கத்துக்கு அழைப்பை எடுத்து கேட்டிருக்கிறார். அங்கிருந்து கிடைத்த பதில் புக்கிங்குக்கு கோள் பன்னுங்கள் என்று தொடர்பை துண்டித்து இருக்கிறார். ஆனால் அடுத்த இலக்கம் தெரியாத இந்த முதியவர் எங்கே சென்று யாரிடம் கேட்பார் அவரிடம் கிடைத்த இலக்கத்துக்கே அவர் அழைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஆனால் அங்கிருந்து பதில் சொன்னவர்கள் குறித்த இலக்கத்துக்கு அழையுங்கள் என்று மாற்று இலக்கதை வழங்கியிருக்கலாம்.
அவரின் முயற்சியில் மீண்டும் முற்பதிவு செய்யும் 065 222 3076 இலக்கதைப் பெற்று அங்கு அழைத்து குறித்த வைத்தியர் எப்போது வருவார் என்று கேட்க ஞாயிற்றுக்கிழமை என்று சொல்லி விட்டு கட்பண்ணியிருக்கிறார். ஏன் அழைத்தார் என்ன சொல்லப்போகிறார் என்று கேட்கமாட்டார்களா..?
எனவே இப்படியான தவறுகளைச் செய்வதை தடுத்து நோயாளார்கள் தொடர்பில் கருத்துக்கேட்க எடுக்கும் அழைப்புக்கு சரியான பதில் வழங்கும் ஏற்பாடுகளைச் செய்தல் நன்றல்லவா..?
அத்துடன் வெறும் ரூபாய்க் கணக்கில் தொலைபேசியில் உரையாடும் வாடிக்கையாளர் நிலையங்களுடன் தொடர்பு கொள்ளும் போது எவ்வளவோ ஒழுக்கமாகவும் அமைதியாகவும் ஆறுதலாகவும் பதில் சொல்லும் தொலைத் தொடர்பு நிலையங்களின் வாடிக்கையாளர் சேவை போன்றல்லாவிட்டாலும் அதன் அரைவாசிக்கேனும் பல்லாயிரங்களில் பணமெடுக்கும் தங்கள் நிலையங்களையும் நோயாளர் சம்மந்தப்பட்டோரின் தொலைபேசிக்கு பதில் சொல்லுவதற்காய் தங்களையும் மாற்றுதல் நன்றல்லவா..?
அதுபோன்று அண்மையில் கல்முனையில் ஒரு தணியார் வைத்தியசாலையில் ஒரு பெண் வைத்தியரின் ஆலோசனைக்கமைய சிறிய குழந்தைக்கு ஊசி மருந்து ஏற்றுவதற்கு ஒரு ஊசி மருந்துக்கு ரூபாய் 5000 வீதம் ஏழு 7 ஊசிமருந்துக்காக ரூபாய் 35000 பெறப்பட்டுள்ளன. ஆனால் குறித்த ஊசி மருந்து ஒன்றின் விலை 100 ரூபாயும் இல்லை என்பது மேலும் ஒரு வைத்தியரை கேட்டதும் தெரிய வந்துள்ளது. எனவே குறித்த வைத்தியசாலையின் பற்றுச் சீட்டுக்களும் வைத்தியரின் சிட்டும் இம்போட்மிரரில் ஆதாரத்துக்காக வைக்கப்பட்டுள்ளன. தேவையேற்படின் அதனையும் வெளியிட்டு இப்படியான அநியாயங்களைத் தடுக்க குரல் கொடுப்போம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வைத்தியசேவை என்பது பெரும் சேவை. இதனை செய்வோருக்கு நாமும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். ஆனால் இன்று எல்லாமே தொழிலாக மாறிவிட்டதன் பின்னர் காசியில்லையென்றால் மனிதன் தூசியாக வீசப்படும் நிலையேற்பட்டுள்ளது. மனங்களைக் கொஞ்சம் மாற்றி வேலைக்கேற்ற பணத்தைப் பெற்று ஏழை மக்களின் சுகாதாரத்துக்கும் உதவிகள் செய்தல் பெரும் கொடை என்பதனை புரிந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி