எம்.வை.அமீர்-
பிரதேசத்தில் பெய்த தொடரான மழையின் காரணமாக 2017-11-04 ஆம் திகதி சாய்ந்தமருதின் தோணாவை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதைகள் சல்பீனியாக்களாலும் வெள்ள நீராலும் மூடப்பட்டிருந்தது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா மற்றும் கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஐ.லியாக்கத் அலி ஆகியோர் விரைந்து எடுத்துக்கொண்ட முயச்சியின் பயனாகவும் தோணா அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினர் விரைந்து மேற்கொண்ட செயற்பாட்டின் காரணமாகவும் உடனடியாக தோணாவின் முகத்துவாரத்தில் இருந்த மணல் அகற்றப்பட்டு வெள்ள நீர் கடலுக்குள் செலுத்தப்பட்டதால் வெள்ளம் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.