தமிழ் நாட்டை பிஜேபி கோட்டையாக மாற்ற துடிக்கும் குருமூர்த்தி யார் ?

நிலாம்டீன் புலனாய்வுக் கட்டுரை-

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின் தற்போது ஊடகங்களில் அதிக பார்வை கொண்ட பெயர் எடிட்டர் குருமூர்த்தி… யார் இந்த குருமூர்த்தி? எதற்காக அதிமுக உட்கட்சி விவகாரங்களில் சமீப காலமாக அதிகம் தலையிடுகிறார்? இவர் ஒரு பட்டய கணக்காளர், காவி பரிவாரங்களின் அமைப்பான RSS மற்றும் மோடியின் ஆலோசகர் என்ற பொது விவரங்களை எல்லாம் தாண்டி சில இவரை பற்றிய அறியாத பல உண்மைகள் இப்போது கசிந்து கொண்டிருகின்றது.

காலம் சென்ற நடிகர் துக்ளக் ஆசிரியர் சோ தனக்குப்பின் துக்ளக் வார பத்திரிகையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க குருமூர்த்தி தற்போது துக்ளக் பத்திரிகையை பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.

2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா மற்றும் சசிகலா நட்பில் விரிசல் ஏற்பட்டு கார்டனை ஆட்டைய போட காவி கும்பல் ஒரு சதி வேலையை மோடி, மற்றும் காலம் சென்ற நடிகர் மற்றும் துக்ளக் சோ ராமசாமி மற்றும் தெஹெல்கா பத்திரிகையின் ஊடாக செய்தது,

பின்னர் சசிகலா கார்டனை விட்டு ஜெயாவால் நீக்கபட்ட நிலையில் குஜராத்தை சேர்ந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கார்டனில் ஜெயாவிற்காக நியமிக்கபடுகின்றனர், அதன் பின்னரே ஜெயா உடல் நிலையில் ஒரு அசாதாரண மாற்றம் நிகழ்கிறது.

ஜெயாவின் அரசியல் நிலைப்பாடில் மாற்றம்

2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபின் , இந்த சோ ராமசாமியின் நாரதர் வேலை ஆரம்பித்தது…. 2011 ம் ஆண்டு மூன்றாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதாவின் அரசியல் பார்வை மற்றும் போக்கில் ஒரு வித அதீத மாற்றம் ஏற்பட தொடங்கியது.

அதன் விளைவாக ஈழம் பற்றிய ஆதரவு நிலை .மூவர் விடுதலை போன்ற தமிழர் நலன் சார்ந்த விவகாரத்தில் ஜெயலலிதா கொண்ட நிலைப்பாடு இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் எரிச்சலை உண்டாக்கியது … சும்மா விடுவார்களா இந்த பார்ப்பனீசம்??? ஜெயாவை சுற்றியிருந்த தமிழர் அரணை உடைக்க தொடங்கியது காவிபட்டாளம் அதற்காக ஏவப்பட்ட முதல் அம்பு தான் பிப்ரவரி 04 2012 ல் தெகல்கா பத்திரிக்கையின் மூலம் சசிகலாவுற்கு எதிரான ஒரு ஜோடிக்கப்பட்ட கட்டுரையை வெளிவிடுகிறது இந்திய உளவு துறை … ஜெயாவை தமிழக அரசியலில் இருந்து ஒதுக்க அல்லது உலகை விட்டே ஒதுக்க நல்லதொரு வாய்ப்பை மோடி அணி எதிர்பாத்துக் கொண்ட நிலையில்தான் சசிகலா ஜெயா மோதல் வந்து அப்போலோவில் ஜெயா அட்மிட் ஆனார்.

அந்த கட்டுரையில் சசிகலா ஜெயாவிற்கு உணவில் (slow poison) மெல்லக் கொல்லும் நஞ்சு கலந்ததாக ஒரு கட்டுகதையை கிளப்பிவிட்டது.. அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசுக்கும் ஜெயாவிற்கும் இணக்கமான சூழ்நிலையில்லை. எனவே இந்திய உளவு துறை ஜெயாவின் நம்பக கதாபாத்திரங்களின் ஒருவரான சோ இராமசாமியின் ஊடாக அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் உதவியுடன் மன்னார்குடி குரூப்பை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றி சோ ராமசாமியின் நட்பு வட்டத்தை கார்டனில் நிறுத்துகிறது….

இந்த இடத்தில் இருந்துதான் தற்போதய அதிமுக துணை பொது செயலர் டி டி தினகரன் ஜெயாவால் ஒதுக்கப்படுகின்றார்.

அப்போது தான் ஜெயாவின் தனி பாதுகாவலர் முதல் சமையல்காரர் வரை அனைவரும் மாற்றப்படுகின்றனர் மேலும் சில குஜராத்தி மருத்துவர்களும் , செவிலியர்களும் மோடியின் மூலமாக போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் …. இதன் பிறகே ஜெயாவின் உடல்நிலையில் பல வித மாற்றங்கள் நிகழ்ந்தன …

அதன் பின்னர் பஜாக விற்கும் ஜெயாவிற்கும் நடந்த முரண்கள் வேறு இருக்கிறது … அப்போதைய காலகட்டத்தில் போயஸ் கார்டனில் மாற்றப்பட்ட நபர்கள் யார் யார் அவர்களின் பின்புலம் என்ன? இப்போது அவர்கள் எங்கு உள்ளார்கள்? என்பது பற்றிய முழு தவலும் சசிகலாவுக்கும் தெரியும்.

ஜெயலலிதா மீது ஏன் காவிகளுக்கு இந்த காழ்ப்புணர்ச்சி?

2004 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பான சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயலலிதா காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்து சிறையில் அடைத்தார். சும்மா விடுமா காவி பரிவாரங்கள் வட இந்தியா முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது, தமிழகத்தை தவிர …

தமிழகத்தில் பல தரப்பட்ட மக்களும் ஜெயாவின் இந்த தைரியமான முடிவை வரவேற்ற போது ஒரு சில பார்ப்பனிய ஊடகங்கள் மட்டும் எதிர்த்தன அதில் முக்கியமான நபர் தான் இந்த “எடிட்டர் குருமூர்த்தி”.

அப்போது சங்கர ராமன் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு துறை சுப்பரிண்டன்ட் பிரேம்குமார் தலைமையில் விசாரித்து கொண்டிருக்கையில், இதே எடிட்டர் குருமூர்த்தி தான் வழக்கை திசை திருப்ப உண்மைக்கு முரணான பல தொடர் கட்டுரைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்தார். இவருக்கும் சங்கர ராமன் கொலைக்கும் என்ன சம்மந்தம் என்று சந்தேகமடைந்த காவல் துறை குருமூர்த்தியை விசாரிக்க ஆரம்பித்தது.

முன்னுக்கு பின் பல முரணான விடயங்களை குருமூர்த்தி கூறியதால் காவல் துறை இவர் மீது பிணையில் வெளிவர முடியாதபடி IPC 176,179,191 மற்றும் 193 சட்டத்தின் படி குருமூர்த்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

அன்று இந்த குருமூர்த்தி தப்பி ஓடி மும்பையில் காவிகளின் உதவியோடு ஒளிந்து கொண்டார்… பிறகு இந்திய காவிகளின் உதவியோடு இந்த வழக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டு திசை மாறியது.

அன்றிலிந்து ஜெயலலிதாவை ஒழித்து கட்டி அதிமுகவை ஆட்டைய போடுவதே காவிகளின் முக்கிய குறிக்கோளாக இருந்து வந்தது. அதற்கு இது நாள் வரை சோ ராமசாமி ஒரு துருப்பாக இருந்து வந்தார் இப்போது அதே வேலையே இந்த எடிட்டர் குருமூர்த்தி சோ வின் துக்ளக் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று செவ்வனே செய்கிறார்.

சசிகலாவை முற்றாக ஒதுக்க காரணமே குருமூர்த்திதான்

ஜெயாவின் இறப்புக்கு பின்னர் சசிகலாவை மேடை மேடையாக இந்தக் குருமூர்த்தி தூற்றி வந்தார் .சென்னையில் பல பொது வைபவங்களில் இந்தக் குருமூர்த்தி சசிகலா குடும்பத்தை இழுத்து தூற்றி வந்தார் .சசிகலா குடும்பம் தமிழ் நாட்டை ஆழக் கூடாது என்று இந்தக் குரு மூர்த்தி பகிரங்கமாக மேடைகளில் போட்டுத் தாக்கி வந்தார்.

சசிகலாவின் வழக்கை மோடி மூலமாக துரிதப்படுத்திய விடயத்திலும் சசிகலாவை பெங்களூர் சிறை அனுப்பிய விடயத்திலும் முழுப் பின்னணி இந்தக் குருமூர்த்திதான் என்பது பரம ரகசியம்.

மற்றும் தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார் என்ற விடயத்திலும் சிக்க வைய்த்த விடயத்தில் இந்த குருமூர்த்திக்கு நிறையவே தொடர்புண்டாம்..ஆக குருமூர்த்தி தமிழ் நாட்டில் காவிகளின் கோட்டையாகவும் பிஜேபி ஆட்சியாகவும் மாற்றத் துடித்துக் கொண்டிருக்கின்றார்.

இப்போது ஒபிஸ் இபிஸ் இருவரும் மோடியின் காலடியில் இருந்து கொண்டு மோடியின் அடிமைகளாக செயல்பட்டு வருகின்றார்கள்.

ஆனால் உண்மையில் சசிகலா காவிகளின் பிடியில் இருந்து விடுபடவும் தமிழ் நாட்டில் இருந்து பிஜேபியை துரத்தவும் துடித்துக் கொண்டிருக்கின்றார்.

ஒரு சம்பவம் மட்டும் உண்மை ஜெயாவுக்கும் சசிக்கும் அடிக்கடி சண்டை வருமாம் எல்லாம் இந்த வழக்கு விடயமாகத்தான்.அன்றும் சண்டை வந்துள்ளது. தள்ளுமுள்ளுப் பட்டு ஜெயா கீழே விழுந்துள்ளார்.ஆனால் அப்போலோவில் காவிகள் ஏதும் செய்திருக்க வேண்டும் சசியை காவிகள் அணி ஒரு பொறி வைத்து சிக்க வைத்து எதாவது பண்ணியிருக்க வேண்டும். சசி திட்டமிட்டு இதை செய்யவில்லை என்றாலும்

ஒரு காலம் வரும் ஜெயாவை யார் கொண்டார்கள் என்பதை சசிகலா சொல்லும் காலம் வெகுதூரம் இல்லை எனலாம் .குருமூர்த்தியின் கனவை உடைத்து மீண்டும் அதிமுகா ஒரு அணியில் ஆளும் காலமும் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -