கிழக்கின் கல்வியை குழி தோண்டிப் புதைக்க தேசிய கல்வியமைச்சு கங்கணம் கட்டி செயற்படுகின்றதா-முன்னாள் முதலமைச்சர் கேள்வி

கிழக்கு மாகாணத்தின் கல்வித் துறையை குழி தோண்டிப் புதைப்பதற்கு தேசிய கல்வியமைச்சு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றதா என்ற சநதேகம்தோன்றியுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

கிழக்கின் கல்வித் துறை வீழ்ச்சிக்கு ஆசிரியர் பற்றாக்குறை பிரதான பிரச்சினையாக உள்ள நிலையில் எமது ஆசிரியர்களை வௌிமாகாணங்களுக்குநியமிக்கின்றமையானது கிழக்கு மாகாணத்துக்கு தேசிய கல்வியமைச்சு செய்த துரோகமாகவே கருத வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள்முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஏறாவூரில் இன்று இடமபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்பதே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டை சந்தித்த போதே அவர் இதனைக் கூறினார்,

கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 5021 ஆசிரியர் வெற்றிடங்களை சுட்டிக்காட்டி 1700 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குவதற்கான அனுமதியையும் அதற்குரிய நிதியையும் நாம் கொண்டு வநதோம்.

அத்தோடு மட்டும் நின்றுவிடாமல் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் நாம் எமது மாகாணத்தைச்சேர்ந்த கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களை எமது மாகாணத்தலேயே நியமிக்கவேண்டும் என்பதற்கான அழுத்த்ங்களை கொடுத்து போராட்டங்ளையும் முன்னெடுத்து அவர்களுக்கு எமது மாகாணத்தலயே நியமனங்ளை பெற்றுக்கொடுத்தோம்,


ஆனால் இம்முறை எமது ஆசிரியர்கள் வெ ளி மாகாணங்களின் தூரப் பிரதேசங்களில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்,

இன்று எமது ஆசிரியர்கள் பலர் கஷ்டப்பட்டு படித்து தொழிலே வேண்டாம் எனும் நிலைக்கு தள்ளப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாக இருக்கின்றனர்.

இவர்களின் கண்ணீருக்கு இன்றைய கிழக்கு மாகாணத்தின் மொத்த அதிகாரங்களையும் தம் வசம் வைத்திருக்கின்ற ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது,

அது மாத்திரமன்றி அன்று எமது மாகாண சபை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று எங்கே ???


இன்று எமது ஆசிரிய வளங்கள் வெ ளி மாகணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன,இதனால் அவர்களும் பாதிக்கப்பட்டு எமது ஆசிரியர் பற்றாக்குறையும் தொடர்ந்தும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,

அன்று பாராளுமன்றத்தில் எம்மை விமர்சிப்பதற்கும்,நகர சபை பணிபுரியும் ஊழியர்கள் குறித்தும் கேள்வியெழுப்ப நேரம் இருந்த உங்களுக்கு இந்தக் கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினை குறித்து பேசுவதற்கு நேரம் கிடைக்கவி ல்லையோ???

உங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் உங்கள் கொள்வை இன்று உணர்ந்து கொண்டிருப்பார்கள்.

சிறுபான்மைச் சமூகத்துக்கு பாதகமான மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தினால் எமக்கு பாதிப்புள்ளது என தெரிந்து கை தூக்கியவர்கள் தானே நீங்கள்,ஆக சமூகத்தின் பிரச்சினைதொடர்பிலேயே பேச முடியாத நீங்கள் எப்படி கல்வியல் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி பாராளுமன்றத்தில்பேசப் போகின்றீர்கள்,

வெ ளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களின் ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய தேவையுள்ளது என்பதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -