எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
நாட்டின் பலபகுதிகளிலுமுள்ள கல்விக்கல்லூரிகளிலிருந்து வெளியாகி மட் / பட்டிருப்பு தேசிய பாடசாலை ,களுவாஞ்சிக்குடி யில் முதல் நியமனம் பெற்ற தமிழ் சிங்கள முஸ்லிம் ஆசிரிய ஆசிரியைகளை வரவேற்று அவர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி அறிமுக நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன் எம்.சுவேந்திரராஜா ரீ.ஜனேந்திரராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்