தேசிய இளைஞா் சேவை மன்றமும் இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணமும் இணைந்து 31 வது ஆண்டாக சுப்பலீக் கரப்ப ந்தாட்ட சவால்கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி மகரகமவில் உள்ள தேசிய இளைஞா் சேவை மன்றத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதமஅதிதியாக மின்வலு பலசக்தி அமைச்சா் ரன்ஜித் சியாம்பலாப்பிட்டிய, கலந்து கொண்டாா். இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் பணிப்பாளா் நாயகம் துசித்த மெலதந்திர, மற்றும் தேசிய இளைஞா் சேவை மன்றத்தின் தலைவா் ஏரந்த வெளியன்கே ஆகியோா்கள் கலந்து கொண்டு இலங்கை மினசார சபையின் கரப்பாந்தாட்ட அணிக்கு வெற்றிக் கிண்ணத்தை கையளித்தனா்.
இப்போட்டியில் இலங்கை மின்சார சபையின் அணிக்கும் - இலங்கை ரானுவ அணிக்கும் , இறுதிப்போட்டி நடைபெற்றது. அத்துடன் இலங்கை ருபாவாஹினி, இளைஞா் சேவையின் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையேயும்ப்போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.