அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் மாநாடு...


சத்தார் எம் ஜாவித்-
கில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை இந்த நாட்டில் முஸ்லிம் சமுகத்தினதும், ஏனைய சமுகங்களினதும் கல்விக்காக மேற்கொண்டு வரும் செயற்றிட்டங்களை விளக்கும் வகையிலான மாநாடு ஒன்றினை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை மியாமி ஹோட்டலில் நடாத்தியது. 2017; - எல்லோருக்குமான கல்வி எனும் தொனிப் பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றது

அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை கொழும்பு உள்ளிட்ட பல பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்பதில் எதிர் கொண்டு வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை இனங் கண்டு அவற்றிற்கு உதவி வருகின்றது. பல மாணவர்கள் வறுமை காரணமாக பாடசாலைகளுக்கு செல்லாதிருப்பதை அறிந்து அவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பனவற்றை வழங்கி அவர்களின் கல்வியை தொடர வழியமைத்து வருகின்றது. 

 பல பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் இனங்காணப்பட்டு அவற்றை தனவந்தர்களின் உதவியுடன் நிவர்த்தி செய்து வருகின்றது, சகோதர மொழிப் பாடசாலைகளில் விஞ்ஞான கூடங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளது, திறந்த பல்கலைக்கழகத்தில் மௌலவி பட்டம் பெற்றவர்களை இணைத்து மேல் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள வழியமைத்து வருகின்றது. 

இன ஒற்றுமை, மார்க்க ரீதியான தீர்ப்புக்களை வழங்குதல் என்பனவற்றையும் அது மேற்கொண்டள்ளது. இந்த செயற் திட்டங்கள் பற்றி; சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களினால் புள்ளி விபரங்கள், கானொலிகள என்பனவற்றின் உதவியோடு இந்த மாநாட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்-ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல இஸ்லாமியப் பிரசாரகர் அஷ்-ஷெய்க் முப்தி இஸ்மாயில் மென்க் கலந்து கொண்டதுடன் விஷேட அதிகளாக திருச்சி ஜாமிஆ அன்வாரில் உலூம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் ரூஹூல் ஹக், அமைச்சர் றிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அகார் முஹம்மட், யூசுப் முப்தி, பல உலமாக்கள், மௌலவிமார்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நாடு பூராகவும் உள்ள அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -