ஏறாவூர் சுதந்திரக்கட்சி வேட்பாளர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு

எம்.ஜே.எம்.சஜீத்-

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும், ஏறாவூர் நகர சபை வேட்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (20) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர்

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஏறாவூர் நகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற வாழ்த்தும் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுமாறும், நகர சபை அதிகாரம் கிடைக்கப்பெற்றால் தன்னால் முடிந்த அபிவிருத்திப்பணிகளை செய்து தருவதாகவும் இதன்போது ஜனாதிபதி உறுதியளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும், வேட்பாளருமான எம்.எஸ். சுபையிரை நேற்று (19) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஜனாதிபதி ஏறாவூர் பிரதேச வேட்பாளர்களை அழைத்துக்கொண்டு கொழும்பு வருமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -