எம்.வை.அமீர்-
பல்வேறு சமூக நலத்திட்டங்களில் ஈடுபட்டு வரும் உதவும் கரங்கள் அமைப்பின் மூன்றாண்டுகள் நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் 2017-12-22 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி வளர்ச்சிக்கு கை கொடுப்போம் எனும் நிகழ்வு நிகழ்வு அவ் அமைப்பின் தலைவர் எஸ்.ரி.யாஸீர் அகமட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாலின் தலைவர் வை.எம்.ஹனிபாவும் அதிதியாக கல்முனை கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரும் விஷேட அதிதியாக அமைப்பின் ஆலோசகரும் வங்கி முகாமையாளருமான ஏ.எல்.அன்வர்டீனும் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.