அரசியலிலே புது முகம் ஒன்றை பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் அவரை வெற்றிபெற்றுத்தந்தாள் இப்பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களைப் போன்று அதிகமான அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்து நடக்கும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்
பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் கோறளைப்பற்று பிரதேச சபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் ஏ.யூ. நாசரை அறிமுகப்படுத்தும் கூட்டம் பிறைந்துரைச்சேனையில் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
சிலர் இப்பகுதிக்கு பணம் மற்றும் அரிசியைக் கொண்டு வந்து உங்களது வாக்குகளை கேட்பார்கள் அதிலே நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் நாங்கள் கிணற்றுத்தண்னி வரத்து தண்னியல்ல உங்களுடைய கஸ்டத்தில் சந்தோசத்தில் உங்களது பிள்ளைகளின் படிப்பில் உங்கள் பிரதேசத்து வீதி மற்றும் வடிகான் பிரச்சினை என்று யோசிக்கிறோம் அதனை செய்கிறோம் ஏன் என்றால் நான் இப்பிரதேசத்து மகன் என்றபடியால் உங்களது கஸ்டம் தெரிந்ததால் இவைகளை செய்து வருகிறேன்.
நாங்கள் பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் எங்களது வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற ஆணையைக் கேட்பது உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பிரதேசத்தின் அபிவிருத்தியில் அக்கறையில்லாமல் அரிசி பெக்கிற்காக அல்லது ஆயிரம் ரூபா பணத்திற்காக உங்களது வாக்குளை கொடுப்பீர்கள் என்றால் நீங்கள் உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு செய்யும் துரோகம், இந்த பிரதேசத்திற்கு செய்கின்ற துரோகம் என்று நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
பிறைந்துரைச்சேனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டாரக் குழு தலைவர் ஆர்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் வாழைச்சேனை வட்டாரக வேட்பாளர் எப்.ஜவ்பர் மற்றும் கட்சியின் வட்டாரக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.