ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ஓட்டமவடி வாழைச்சேனை பிரதேச சபைகளின் நிருவாக எல்லைகளுக்குள் சேகரிக்கப்பட்டுகின்ற குப்பைகளை மஜ்மா நகர் - சூடுபத்தினசேனை எனும் வயல் நிலத்தினை அண்டிய சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கொட்டப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் இறைச்சிக்காக அறுக்கப்படுகின்ற மாடுகளினுடைய கழிவுகள் எல்லாம் குறித்த இடத்திலேயே கொட்டப்பட்டுகின்றன. ஆகவே குப்பைகள் கொட்டப்படுகின்ற பிரதேசத்தினை சுற்றி வேலான்மை பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் குப்பைகளை தேடிவருகின்ற யானைகள் வேலான்மை பயிர்செய்கைகளை முற்றாக அழித்து விடுகின்றது என சமூக ஆர்வலரும் பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான சாட்டோ மன்சூர் தெரிவிக்கின்றார்.
மேலும் குறித்த இடத்தில் அறுக்கப்பட்ட மாடுகளினுடைய கழிவுகளையும்இ குப்பைகளையும் கொட்டுவதனால் முற்றாக சூழல் மாசடைந்து காணப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் நீண்ட தூரத்திற்கு துர் நாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் போன்றவர்கள் தலையிட்டு வேறு இடத்திற்கு குப்பைகள் கொட்டுவதற்கான இடத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது என தெரிவித்தார்.