கிண்ணியா மக்களின் மனதில் இடம் பிடிக்க துவங்கியுள்ள கிண்ணியா நகர சபை செயலாளர் என்.எம்.நௌபீஸ்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

மீபத்தில் கிண்ணியாவின் நகர சபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.நூர்தீன் முகமட் நௌபீஸ் அவர்கள் தனது கடமையினைப் பொறுப்பேற்றதில் இருந்து தனது பணியினை செவ்வனே செய்து வருவதனை அவதானிக்க முடிகிறது நகர சபை கலைக்கப்பட்டு தவிசாளர் இன்றிய நிலை செயலாளர் இவ்வாறாக கடமையுணர்ச்சியினை சிரமேற்கொண்டு தனது பணியினை செய்து வருவதானது உண்மையிலேயே அத்தியாவசியமானதும் ஆக்கபூர்வமானதுமாகும்.

வீதி விளக்குகள் பொறுத்துதல்,வடிகான்களை துப்புரவு செய்தல் ,கரையோர அலைத் தடுப்பு சுவர் சீராக்கல் பற்றிய முன்னெடுப்புக்கள் போன்ற விடயங்களில் தனது அலுவலகர்கள் உட்பட ஊழியர்கள் சகிதம் செயலாளர் தானே களத்தில் நின்று செயற்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

நகர சபை செயலாளர் எனும் பதவி நிலையானது அரசியலுக்கு அப்பால் உள்ள ஒரு விடயமாகும்.சாதாரணமாக வீதிக்கு பெயர் பலகை பொறுத்துவதில் கூட அரசியல்வாதிகள் தமது பெயரையும் பொறுத்தும் இந்தக் காலத்தில் ஒரு அரச அதிகாரி எந்தச் சுயநலமும் இன்றி மக்கள் நலனில் அக்கறை காண்பித்து கடமையாற்றுவதானது கிண்ணியா மக்கள் யாவரினதும் கவனத்தைப் பெற்றுள்ளது.

கிண்ணியா நகர சபை வரலாற்றில் இவ்வளவு ஆக்கபூர்வமாக களப்பணிகளை மேற்கொண்ட எந்த செயலாளரும் இது வரை கிண்ணியா மக்கள் கண்டிராத நிலையில் செயலாளர் என்.எம்.நௌபீஸ் அவர்களின் இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே மெச்சும் படியாகத்தான் உள்ளனஉள்ளூராட்சித் தேர்தலின் பின்னரும் கூட அரசியல் தலையீடுகளையும் தடைகளையும் தாண்டி செயலாளர் இது போன்ற தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே மக்கள் யாவரினதும் எதிர்பார்ப்பாக இருந்து கொண்டிருக்கிறது.

அதே சமயம் மக்களின் நலன் கருதி செயற்படும் இவ்வாறான நிருவாகத் தலைவர்களுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் உருவாக்குவதென்பது வழக்கமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நமது நகர சபை செயலாளருக்கும் இவ்வாறானதொரு சூழல் எலவாய்ப்பிருக்கிறது.அவ்வாறானதொரு நிலையில் எமது செயலாளர் அதனை எவ்வாறு வெற்றி கொள்ளப்போகிறார் என்பது அவருடைய இந்த சேவையினை தொடர்ந்தும் கிண்ணியா மக்கள் பெற்றுக் கொள்ள எவ்வாறு தமது ஆதரவினை வழங்கப்போகின்றார்கள் என்பதுமே "கிளைமார்க்ஸ்" ஆகும்.

எது எவ்வாறாயினும் செயலாளர் என்.எம்.நௌபீஸ் அவர்களின் சேவை எமது மண்ணுக்குத் தேவை இவர் போன்ற நல்லெண்ணம் கொண்ட ஆளுமைகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -