ஏ.ஆர்.எம்.றிபாய்,எஸ்.எச்.எம்.றிஹான் -
இன்று ஏறாவூரில் உள்ள அனைத்து அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் அரபிக்கல்லூரிகள் அமைப்புக்கள் இனைந்து மாபெரும் மீலாத் சிறப்பு பேரணி ஏறாவூர் பரீட் மீராலெப்பை ஷியாரத்திலிருந்து விஷேட துஆ பிரார்த்தனையோடு ஆரம்பிக்கப்பட்டு ஏறாவூர் நகர் ஏறாவூர் பற்று பிரதேசங்களுடாக சென்று மீண்டும் ஏறாவூர் முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலை சென்றடைந்தது.
இன்றைய பேரணியில் பல சகோதரர்களும் அதிகமான வாகனங்களும் அணிவகுத்து தக்பீர் முழக்கத்துடனும் ஸலவாத்துக்களுடனும் சென்றதை பார்த்து பல மூத்தோர்கள் பழமையை நினைத்து அழுததை கண்ணுடாக கண்டோம். முழு உலகமுமே அண்ணலாரின் வருகையை அருளாக எண்ணி கொண்டாடி கொண்டிருக்கிறது.
இம்முறை ஒன்றினைந்த கைகளாக அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் ஊர்வலம் ஏறாவூரில் மிகச்சிறப்பான திட்டமிடல் சிறிது நேரம் ஏறாவூர் நகர் வாகன நெரிசல் மூலம் ஸ்தம்பிதமடைந்ததை அவதானிக்க முடிந்தது.
இவ்வாறான நிகழ்வு வருடா வரும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது