ஏறாவூர் நகரசபையில் பொதுச் சந்தைக் கடைத்தொகுதியின் கடைகளுக்கான திறந்த கேள்வி மனுக்கள்

ஏறாவூர் ஏ.ஜி.முஹம்மட் இர்பான் - 

றாவூர் நகர சபைக்கு கீழுள்ள ஏறாவூர் தெற்குப் பொதுச் சந்தைக் கடைத்தொகுதியின் கடைகளுக்கான திறந்த கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் இன்று (19) தெரிவித்தார்.

இதற்கான கேள்வி மனுக்கள் இன்றிலிருந்து கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பப் படிவங்களை ஏறாவூர் நகர சபையில் பெற்றுக்கொண்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 2017.12.27 ஆம் திகதி நன்பகல் 12.00 மணிக்கு முன்னர் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது 2018.01.01 தொடக்கம் 2018.12.31 ஆம் திகதி வரையான ஒரு வருடத்துக்கான கேள்வி அறிவித்தல் எனவும் இறுதித்தினமான அன்றைய தினம் 3.00 மணிக்கு கேள்வி மனுக்கள் யாவும் திறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -