மகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதிகள் எல்லை நிர்ணயம் தொடர்பாக தேசிய ஷுரா சபை


மாகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதிகள் எல்லை நிர்ணயம் தொடர்பாக தேசிய ஷுரா சபையும் அதன் அங்கத்துவ அமைப்பான அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் அணிகளின் சம்மேலனமும் இணைந்து நாடளாவிய ரீதியில் விழிப்பணர்வு மற்றும் ஆய்வுப்பணிகளை மிகவும் குறுகிய கால இடைவெளியில் மேற் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதற்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழுவிடம் சமூகம் சார் கரிசனைகள் முன்மொழிவுகள் அறிக்கையாக 06/12/2017 அன்று கொழும்பு மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம் பெற்ற அமர்வின் பொழுது தேசிய ஷூரா சபைப் பிரதிநிதிகளால் சமர்பிக்கப்பட்டது.

கடந்த பல வாரங்களாக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் பாராளுமன்ற மாகாண சபை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இடம் பெற்ற கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இன்று மேற்படி அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

ஏற்கனவே பல்வேறு மாவட்டங்கள் சார்பாக அறிக்கைகள் அவ்வப்பிரதேச பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது, அதேவேளை கொழும்பு மாவட்டம் தொடர்பிலான அறிக்கையும் இன்று இடம் பெற்ற சந்திப்பின் பொழுது கையளிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -