ஏ.ஆர்.எம். றிபாய், ஏ.எச்.எம். றிஹான்-
மாணவர்ளின் தகவல் தொழில் நுட்ப அறிவை விருத்தி செய்வதனை நோக்கமாக கொண்டு மிக கரிசனையோடு செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் அலிகார் தேசிய பாடசாலைக்கு 25 கணனி வசதிகளை உள்ளடக்கிய கணனிக் கூடம் மற்றும் மல்ட்டி மீடியா புரஜகட் ஒன்றையும் பெற்றுக் கொடுத்தார்கள் அது மாத்திரம் அன்றி தனது பன்முகப்படுத்தப்பட்ட 01மில்லியன் நிதி ஒதுக்கீடு மூலம் உள்ளக பொருத்துக் கல் பாதை அமைத்து கொடுத்தார்கள்.
இன்று 01.12.2017 காலை 10:00 மணியளவில் கல்லூரில் அதிபர் தலைமையில் நடைபெற்றது
இத் திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர்
செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் கலந்து கொண்டு கணனிக் கூடம் மற்றும் உள்ளக வீதி என்பன திறப்பு விழா செய்யததுடன் மல்ட்டி மீடியா புரஜக்ட் பாடசாலை நிருவாகத்திடம் கையளிப்பும் செய்தார்
இன் நிகழ்வுகளில் மத்திய கல்வி அமைச்சின் செயலாளர்
சுனில் ஹொட்டியாராச்சி அவர்களும் கலந்து கொள்ள உள்ளார்.