மீலாதுந் நபி தினத்தையொட்டி சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசேட கலாசார நிகழ்வு ஒன்றினை வாழைச்சேனை அகில இலங்கை YMMA அமைப்பின் ஏற்பாட்டில் வாழைச்சேனை இக்பால் சனசமூக நிலையத்தின் ஒருங்கிணைப்பிலும் அதன் மண்டபத்தில் பி.ப.3.30 மணிக்கு நடைபெற்றது.
வாழைச்சேனை அகில இலங்கை YMMA அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.றிபாய்தீன்( BSc) ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு YMMA அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் ஏ.பி.எம்.இர்பான்(MA) ஆசிரியர் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் சர்வமத பெரியார்களான பசார் பள்ளிவாயல் பேஸ் இமாம் டி.எல்.அப்துல் மஜீத்(சர்க்கி)அவர்களும் வாழைச்சேனை கைலாய பிள்ளையார் ஆலய குருக்கள் சில்சி இறாம் இறாஜன பாபு அவர்களும் மற்றும் வாழைச்சேனை புத்த ஜெயந்தி விகாரையின் விகாராதிபதி தம்மா லங்கா தேரர் அவர்களும் கலந்து கொண்டதுடன் பிரதேசத்தின் முக்கியஸ்தர்களான ஓய்வு பெற்ற உதவி அதிபர் அல்.ஹாஜ் முத்துவாப்பா பலாஹி,வாழைச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளி வாயல் பேஸ் இமாம் ஏ.எல்.முஸம்மில் மௌலவி, ஹைறாத் பள்ளி வாயல் பேஸ் இமாம் ஏ.எல்.முபாறக் மௌலவி, தேசியத்தலைவரும் கௌரவ அமைச்சருமான அல்.ஹாஜ் ரவூப் ஹகீம் அவர்களின் இணைப்பாளர் ஏ.எல்.பாரூக்(JP) , அல்.ஹாஜ் யு.எல்.சுஹைப் (தேசமாணி),பதுரியா பள்ளி வாயல் பேஸ் இமாம் எம்.தாஜிதீன் மௌலவி ,மத்ரஸத்துல் ஸலாஹியா அதிபர் ஏ.ஐயுப் மௌலவி அவர்களும் கலந்து கொண்டனர்.
செல்வி எம்.எப்.இல்ஹாமா அவர்களினால் கிறாஅத் ஓதி ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் வாழைச்சேனை இக்பால் சனசமூக நிலையத்தின் தலைவர் ஏ.எல்.எம்.லியாப்தீன் (JP) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் அத்துடன் ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.வஹாப் ஆசிரியர்,பாடகர் பாரூக் ஆகியோரின் இஸ்லாமிய கீதமும் , மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வின்போது கலை கலாசார புத்தாக்க நிகழ்ச்சிகளை பயிற்றுவித்து தேசிய ரீதியில் மாணவர்களை வெற்றி பெறச்செய்த ஐ.சபீக்(BA) ஆசிரியர் மற்றும் தேசிய ரீதியில் மீலாத் விழாவில் வெற்றி பெற்ற மாணவி ஜே.ஜுமைனா ஹானி ஆகியோருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக கல்குடா YMMA அமைப்பின் செயலாளர் எம்.ஐ.ஜஹாப்தீன்(JP)அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.