க.கிஷாந்தன்-
பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்று 13.12.2017 அன்று பூண்டுலோயா கைப்புகலை பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து 13.12.2017 அன்று காலை 8.00 மணியளவில் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் பூண்டுலோயா கைப்புகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மோட்டர் சைக்கிளில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், மோட்டர் சைக்கிள் பிரதான வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற வேளையில் அவ்வழியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கண்டு குறித்த நபரை கொத்மலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் பூண்டுலோயா நகரப்பகுதியை சேர்ந்த கே.வி.ஜீ. அஜந்த குமார இந்துநில் (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ப+ண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.