எம்.ஜே.எம்.சஜீத்-
அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மக்களுக்கு சிறந்த பணி புரியும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது நமது மக்களின் நலன்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சிறந்த பணிகள் புரியும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு வாக்களித்து தங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதால் நமது உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகளினால் நமது மக்கள் பயன் பெரும் நிலமை உருவாகும் என தேசிய காங்கிரஸ் சார்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தோடர்ந்தும் உரையாற்றுகையில்....
வட்டார முறையில் புதிதாக நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகாரங்கள் வழங்கப்பட்டு கிராமங்கள் மட்டத்தில் அபிவிருத்தி பணிகள் செய்யப்படவுள்ளன. நமது பிரதேசத்திற்கான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு கிடைக்கப்பெற்றுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி நமது மக்களுக்கான எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையும், நமது சமூகத்தின் உணர்வுகளையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.
தேசிய காங்கிரஸ் அரசியல் அதிகாரத்துடன் இருந்த காலம் எல்லாம் அட்டாளைச்சேனை பிரதேசம் அரசியல் ரீதியாகவும், அபிவிருத்தி ரீதியாகவும் உச்ச பயனை அடைந்துள்ளது. எனவே நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தினை வழங்குவதன்னுடாக நமது பிரதேசத்தில் இடைநிறுத்தப்பட்டு நிறைவு செய்யப்படாமல் உள்ள அபிவிருத்தி திட்டங்களை திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
கடந்த பொது தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியில் யானை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்க்கு வாக்களித்தனால் அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் பல சவால்களை எதிர்நோக்கியதுடன் நமது பாரம்பெரிய காணிகளை பரித்து எடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நமது மாவட்டத்தில் வரலாற்று இன உறவுடன் வாழ்ந்து வந்த சமூகங்கள் மத்தியில் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்தன் ஊடாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த சமூகங்கள் அச்சத்துடன் வாழும் நிலமை உருவாக்கப்பட்டது.
எனவே நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திற்கு வாக்களிப்பதனால் நமது கரங்களினால் நமது கண்களை குத்துகின்ற அபாய நிலமை உருவாகும். நமது நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகங்களுக்கு இடையே இன உறவை ஏற்படுத்தும் நோக்கோடு செயற்பட்டு கொண்டுயிருக்கின்ற தேசிய காங்கிரஸின் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்து நமது பிரதேச அபிவிருத்திக்கும், இன ஒற்றுமைக்கும் பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர்களான எம்.எஸ்.ஜஃபர், முன்னாள் மக்கள் வங்கியின் முகாமையாளர் ஏ.சீ.கியாஸ்டின், ஏ.எல்.அஜ்மல் ஆசிரியர், முன்னால் கிராம சேவகர் எஸ்.எல். ஏ. ஸமட், பாரீஸ் முகைதீன் , சிறி லங்கா சுதந்திர கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், முன்னாள் தேசிய கல்வி கல்லூரியின் உப பீடாதிபதியுமான எஸ். எல்.ஹூபைத்துல்லா உட்பட கல்விமான்களும் முக்கியஸதர்களும் கலந்து கொண்டனர்.